Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 3

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 3

எழுதியவர் Sindhuja SM
Mar 03, 2024
12:17 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,940க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.47,520ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,372ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.50,976ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியா

கடந்த ஒரு வாரத்தில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றங்கள்

கடந்த ஞாயிற்றுகிழமை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,840ஆக விற்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 100 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த வாரம், ரூ.46,560க்கு விற்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது ரூ.960 உயர்ந்து ரூ.47,520க்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கு முன், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,349க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 23 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த வாரம், ரூ.50,792க்கு விற்பட்ட ஒரு சவரன் சுத்த தங்கத்தின் விலை, தற்போது ரூ.184 உயர்ந்து ரூ.50,976க்கு விற்கப்பட்டு வருகிறது.