தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் சதம் விளாசினார் மும்பையின் ஷர்துல் தாகூர்
இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் இன்று ரஞ்சி டிராபி போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடும் போது தனது முதல் சதத்தை அடித்தார். மும்பையில் இருக்கும் ஷரத் பவார் கிரிக்கெட் அகாடமி பிகேசி ஆடுகளத்தில் விளையாடும் போது தாக்கூர் தமிழ்நாடு பந்துவீச்சுக்கு எதிராக இந்த சதத்தை பதிவு செய்துள்ளார். மும்பையின் முதல் இன்னிங்ஸின் 81வது ஓவரில் அஜீத் ராமுக்கு எதிராக விளையாடி ஒரு சிக்சருடன் தாக்கூர் தனது சதத்தை எட்டினார். அதன் மூலம், சரிந்து விழ இருந்த மும்பை அணியை பெரிய வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றி உள்ளார் ஷர்துல் தாகூர். 48வது ஓவரில் 106/7 என்ற நிலையில் இருந்த மும்பை அணிக்கு ஹர்திக் தாமோருடன் 100+ ரன்களைச் சேர்த்து அவர் சாதனை படைத்துள்ளார்.