
அம்பானி இல்ல திருமண விழாவில் மனைவி மற்றும் மகளுடன் ரஜினிகாந்த் பங்கேற்பு
செய்தி முன்னோட்டம்
இன்று ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் கலந்துகொள்ள ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருடன் ஜாம்நகரில் இறங்கினார்.
சூப்பர் ஸ்டார் நீல நிற டி-ஷர்ட்டை அணிந்து, ஒரு ஸ்லிங் பையுடன் மிகவும் சாதாரணமாக தோற்றமளித்தார்.
முன்னதாக, அமிதாப் பச்சன் மும்பையின் கலினா விமான நிலையத்தில் தனது மனைவி ஜெயா பச்சன், மகள் ஸ்வேதா பச்சன் மற்றும் பேரன் அகஸ்திய நந்தாவுடன் ஜாம்நகர் நோக்கிச் சென்றதை சமூக வலைதங்களில் காண முடிந்தது.
அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் ஆராத்யா பச்சன் ஆகியோர் அதற்கு பிறகு தனியாக அங்கு வந்து சேர்ந்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
அம்பானி இல்ல திருமண விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு
Superstar #Rajinikanth𓃵 Spotted at Jamnagar Airport..!
— SS Music (@SSMusicTweet) March 3, 2024
. @rajinikanth #AnantAmbani #RadhikaMerchant #BillGates #Rajinikanth #AnantRadhikaWedding #AliaBhatt #RanbirKapoor #RanveerSingh #MSDhoni #RamCharan #ssmusic pic.twitter.com/0VTKJN2b5q