அதிகமான தேவை காரணமாக கடந்த மாதம் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட அதிரடி வளர்ச்சி
செய்தி முன்னோட்டம்
அதிகமான தேவை காரணமாக இந்தியாவின் வாகன சந்தை பிப்ரவரி 2024 இல் அதிகமான வளர்ச்சியைக் கண்டது.
மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டா போன்ற முக்கிய கார் தயாரிப்பாளர்கள் கடந்த மாதம் குறிப்பிடத்தக்க விற்பனை அதிகரிப்பை அறிவித்துள்ளனர்.
சந்தையில் இருக்கும் அதிகமான சரக்குகள், கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் விலை உயர்வுகள் எதுவும் இல்லாத நிலை ஆகிவையால் இந்த விற்பனை அதிகரிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
பிப்ரவரி மாதத்தில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனப் பிரிவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஆட்டோமொபைல்
முக்கிய நிறுவனங்களில் ஏற்பட்ட விற்பனை வளர்ச்சி
மாருதி சுஸுகி இந்தியாவில் 1,97,471 யூனிட்களை விற்பனை செய்து முன்னணியில் உள்ளது. பிப்ரவரி 2023இல் இருந்து ஒரு ஆண்டுக்குள் ஏற்பட்டிருக்கும் (YoY) 9% வளர்ச்சியாகும்.
ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும் உள்நாட்டு விற்பனையில் முறையே 6.8% மற்றும் 19% வளர்ச்சியை கண்டுள்ளன.
டொயோட்டா ஒரு ஆண்டில் 61% விற்பனையை அதிகரித்து தொடர்ந்து இரண்டாவது மாதமாக சாதனைகளை முறியடித்து வருகிறது.
எம்ஜி மோட்டார் மற்றும் ஹோண்டா கார்ஸ் இந்தியா போன்ற பிற நிறுவனங்கள் முறையே 18% மற்றும் 17% விற்பனை வளர்ச்சியைக் கண்டன.