
தேர்தலுக்கு முன்னதாக பாஜக கட்சிக்கு ரூ.2,000 நன்கொடை வழங்கினார் பிரதமர் மோடி:
செய்தி முன்னோட்டம்
மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக கட்சிக்கு ரூ.2,000 நன்கொடையாக வழங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கட்சிக்கு அனைவரும் பங்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பிரதமர் மோடி, 'நாமோ' ஆப் மூலம் 'தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நன்கொடை' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்குமாறு குடிமக்களை வலியுறுத்தினார்.
" விக்சித் பாரதத்தை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சிகளை வலுப்படுத்த @BJP4Indiaவுக்கு நன்கொடை அளிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். NaMoApp மூலம் #DonationForNationBuilding இன் ஒரு பகுதியாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்!" என்று கட்சிக்கு நன்கொடை அளித்த ரசீதுடன் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். .
இந்தியா
பாஜக நன்கொடை வழங்க வலியுறுத்தும் கட்சி தலைவர்கள்
பாஜகவின் நன்கொடை பிரச்சாரம் மார்ச் 1 அன்று தேசியத் தலைவர் ஜேபி நட்டாவால் தொடங்கப்பட்டது. அவர் தனது கட்சிக்கு 1,000 ரூபாய் நன்கொடை வழங்கினார்.
ஜேபி நட்டாவும் இது குறித்து அப்போது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
"இந்தியாவை 'விக்சித் பாரத்' ஆக்குவதற்கான பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு எனது தனிப்பட்ட ஆதரவை உறுதியளிக்க நான் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளேன். நாம் அனைவரும் முன் வந்து 'தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நன்கொடை'யில் சேருவோம்." என்று அவர் கூறியிருந்தார்.
தேர்தல் ஆணையத்தின் தகவலின் படி, 2022-2023 நிதியாண்டில் மட்டும் பாஜக ரூ. 719 கோடி நிதியை மக்களிடம் இருந்து வசூலித்துள்ளது. இது 2021-2022 நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட ரூ.614 கோடியை விட 17 சதவீதம் அதிகமாகும்.