Page Loader
ஆனந்த் அம்பானியின் 'ப்ரீ வெட்டிங்' நிகழ்ச்சியில் பாடிய பிரபல பாப் இசை பாடகி ரிஹானா 

ஆனந்த் அம்பானியின் 'ப்ரீ வெட்டிங்' நிகழ்ச்சியில் பாடிய பிரபல பாப் இசை பாடகி ரிஹானா 

எழுதியவர் Sindhuja SM
Mar 02, 2024
12:34 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று இரவு குஜராத்தின் ஜாம்நகரில் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் 'ப்ரீ வெட்டிங்' நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது பிரபல பாப் இசை பாடகி ரிஹானா தனது குரலால் கூட்டத்தை கவர்ந்தார். 2023 சூப்பர் பவுல் நிகழ்ச்சிக்கு பிறகு, அவர் பாடும் முதல் பெரிய நேரடி நிகழ்ச்சி இதுவாகும். மிகவும் பிரபலமான பாடல்கலான 'ஸ்டே', 'அம்பெர்லா', 'கன்சிடரேஷன்' போன்ற பாடல்களை அவர் நேற்றைய நிகழ்ச்சியில் பாடினார். ஆனந்த் மற்றும் ராதிகா ஆகியோரின் திருமணம் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மூன்று நாள் பார்ட்டியின் ஒரு பகுதியாக இந்த இசை நிகழ்ச்சி அமைந்திருந்தது.

ட்விட்டர் அஞ்சல்

பாடகி ரிஹானாவின் நேற்றைய பெர்பாமென்ஸ்