Page Loader
பாஜக எம்பி கவுதம் காம்பீர் தீவிர அரசியலில் இருந்து விலகல்

பாஜக எம்பி கவுதம் காம்பீர் தீவிர அரசியலில் இருந்து விலகல்

எழுதியவர் Sindhuja SM
Mar 02, 2024
11:35 am

செய்தி முன்னோட்டம்

பாரதிய ஜனதா கட்சி எம்பி கவுதம் காம்பீர், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கிழக்கு டெல்லி தொகுதியில் நின்று வெற்றி பெட்ரா முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், ட்விட்டர் மூலம் இந்த செய்தியை தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார். அரசியலில் நுழைவதற்கு முன்பு அவர் ஆர்வத்துடன் விளையாடிய கிரிக்கெட் விளையாட்டின் மீது தனது கவனத்தை மீண்டும் திருப்ப இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். "கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்துவதற்காக, எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு மாண்புமிகு கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவிடம் கேட்டுக் கொண்டேன். மக்களுக்குச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன். ஜெய் ஹிந்த்," என்று காம்பீர் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

கவுதம் காம்பீர் அரசியலில் இருந்து விலகல்

பாஜக 

காம்பீரின் அரசியல் பயணம் 

காம்பீர், மார்ச் 2019இல் பாஜகவில் சேர்ந்தார். அதன் பின்னர் டெல்லியில் பாஜகவின் முக்கிய முகமாக அவர் மாறிவிட்டார். 2019 மக்களவைத் தேர்தலில் அவர் கிழக்கு டெல்லி தொகுதியில் நின்று 6,95,109 வாக்குகள் வித்தியாசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரவிருக்கும் 2024 தேர்தலில் காம்பீருக்கு தொகுதி வழங்கப்படாது என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையில், 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 100 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.