Page Loader
பிப்ரவரியில் மட்டும் 35,000 முன்பதிவுகள்: ஓலா எலக்ட்ரிக் சாதனை 

பிப்ரவரியில் மட்டும் 35,000 முன்பதிவுகள்: ஓலா எலக்ட்ரிக் சாதனை 

எழுதியவர் Sindhuja SM
Mar 02, 2024
04:30 pm

செய்தி முன்னோட்டம்

பிப்ரவரி 2024இல் மட்டும் 35,000 முன்பதிவுகளை எட்டி ஓலா எலக்ட்ரிக் மாதாந்திர பதிவுகளில் ஒரு பெரிய எழுச்சியை கண்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, ஓலா எலக்ட்ரிக்கின் மாதாந்திர முன்பதிவுகள் 100% அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்குகளை 42% உயர்த்தியுள்ளது. விரிவடைந்து வரும் ஓலா எலக்ட்ரிக்கின் S1 ஸ்கூட்டர் மாடல்களும், மலிவான மின்சார வாகனங்கள்(EVகள்) மீது அதிகரித்து வரும் மக்களின் ஆர்வமும் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று ஓலா எலக்ட்ரிக்கின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அன்ஷுல் கண்டேல்வால் கூறியுள்ளார். முதல் எட்டு ஆண்டுகள்/80,000 கிமீ நீட்டிக்கப்பட்ட பேட்டரி உத்தரவாதத்தை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

ஓலா எலக்ட்ரிக்

முதல்முறையாக அறிவிக்கப்பட்ட 8 ஆண்டுகள்/80,000 கிமீ நீட்டிக்கப்பட்ட பேட்டரி உத்தரவாதம்

வாடிக்கையாளர்கள் கூடுதல் வாரண்டியை தேர்வு செய்யும் வசதியையும் ஓலா எலக்ட்ரிக் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம், கூடுதலாக ரூ.4,999 கட்டும் வாடிக்கையாளர்களுக்கு 1,25,000 கிமீ வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் வழங்கப்படும். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், அதன் சிறந்த வாகனங்கள் மற்றும் EV உள்கட்டமைப்புகள் மூலம் மேலும் சிறந்து விளங்கும் என்று கண்டேல்வால் நம்பிக்கை தெரிவித்தார். "எங்கள் தொழில்துறையில் முதல் முறையாக எட்டு ஆண்டுகள்/80,000 கிமீ வரை நீட்டிக்கப்பட்ட பேட்டரி உத்தரவாதம், அதிகரித்து வரும் சார்ஜிங் பாயின்ட்கள் மற்றும் பரவலான சர்வீஸ் சென்டர்கள் ஆகியவற்றின் மூலம் EVஐ சாதரணமாக பயன்படுத்த இருந்த அனைத்து தடைகளையும் நாங்கள் உடைத்து வருகிறோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.