Page Loader
குடும்ப சண்டை: அமெரிக்காவில் உள்ள இந்திய கோடீஸ்வரர் ரூ.20,000 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்க உத்தரவு

குடும்ப சண்டை: அமெரிக்காவில் உள்ள இந்திய கோடீஸ்வரர் ரூ.20,000 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்க உத்தரவு

எழுதியவர் Sindhuja SM
Mar 02, 2024
02:48 pm

செய்தி முன்னோட்டம்

ஐந்து இந்திய வம்சாவளி சகோதரர்கள் சம்பந்தப்பட்ட ஒரு குடும்ப பகை வழக்கில் அமெரிக்க நடுவர் மன்றம் பல பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஹரேஷ் ஜோகானி என்ற கோடீஸ்வரர் தனது நான்கு சகோதரர்களுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல் நஷ்டஈடு வழங்கவும், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள அவர்களின் சொத்து பங்குகளை மேலும் பிரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 21 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த தகராறில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சுமார் 17,000 குடியிருப்புகள் அந்த நான்கு சகோதரர்களுக்கும் சொந்தமாக உள்ளது. 2003ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த வழக்கு 18 முறையீடுகள் மற்றும் ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளை தாண்டி தற்போது அதற்கு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா

யாரிந்த ஜோகனி சகோதரர்கள்?

குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜோகனி சகோதரர்கள், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வைர வர்த்தகம் செய்து தங்கள் சொத்துக்களை ஈட்டியுள்ளனர். ஜோகனி சகோதரர்களுள் ஒருவரான சஷிகாந்த் ஜோகானி 1969இல் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்து, ரத்தின வணிகம் மற்றும் சொத்து இலாகாவின் மூலம் தனது நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பிறகு, அவர் தனது சகோதரர்களை அந்த நிறுவனத்தின் கூட்டாளிகளாக்கினார். இந்நிலையில், முதன்முதலாக, 2003ஆம் ஆண்டு ஹரேஷ் ஜோகானி என்ற சகோதரர் தனது உடன்பிறப்புகளுடனான நீண்டகால ஒப்பந்தங்களை மீறியதாக கூறப்பட்டதை அடுத்து இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் ஒரு பகுதிக்கு மட்டுமே தற்போது தீர்ப்பு வழக்கப்பட்டுள்ளது. தண்டனைக்குரிய சேதங்கள் மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை பட்டியலிடப்பட்டுள்ளது.