மக்களவை தேர்தல்: பதவியில் இருக்கும் 33 எம்பிக்களுக்கு மாற்றாக புதிய முகங்களை நிற்க வைக்க இருக்கும் பாஜக
பல்வேறு மாநிலங்களில் பெரும் மாற்றங்களுடன், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. பதவியில் இருக்கும் 33 சிட்டிங் எம்.பி.க்களுக்குப் பதிலாக அதில் புதிய முகங்களை பாஜக அறிமுகப்படுத்தியுள்ளது. பாஜக கட்சியின் மக்களவைதேர்தலுக்கான முதல் பட்டியலில் 34 மத்திய அமைச்சர்கள் மற்றும் அசாம், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் இரண்டு முன்னாள் முதல்வர்கள் உட்பட 95 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அசாமில் ஐந்து புதிய முகங்களையும் 6 சிட்டிங் எம்.பி.க்களையும் பாஜக நிறுத்தவுள்ளது. சில்சார் தொகுதியில் ராஜ்தீப் ராய் எம்பிக்கு பதிலாக பரிமாள் சுக்லபைத்யாவை பாஜக நிறுத்தவுள்ளது.
டெல்லி மக்களவை தொகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
எம்பி ஹோரன் சிங் பேயின் தன்னாட்சி மாவட்ட (ST) தொகுதி அமர் சிங் டிசோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. குயின் ஓஜா எம்பியின் கவுகாத்தி மக்களவைத் தொகுதியில் பிஜூலி கலிதா மேதி போட்டியிடுகிறார். பல்லப் லோச்சன் தாஸின் தொகுதியான தேஜ்பூரில் ரஞ்சித் தத்தா என்பவர் போட்டியிடவுள்ளார். டெல்லியில் பாஜக பெயரிட்டுள்ள ஐந்து வேட்பாளர்களில், நான்கு பேர் சிட்டிங் எம்.பிக்களாவர். முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு சொந்தமான சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதி, பிரவீன் கண்டேல்வாலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் போபாலில் சர்ச்சைக்குரிய எம்பி பிரக்யாசிங் தாக்கூருக்குப் பதிலாக மற்றொரு வேட்பாளரை பாஜக அறிமுகப்படுத்தியுள்ளது.