NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு: வெடிகுண்டு வைப்பதற்கு முன் ரவா இட்லி ஆர்டர் செய்த சந்தேக நபர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு: வெடிகுண்டு வைப்பதற்கு முன் ரவா இட்லி ஆர்டர் செய்த சந்தேக நபர்

    பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு: வெடிகுண்டு வைப்பதற்கு முன் ரவா இட்லி ஆர்டர் செய்த சந்தேக நபர்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 02, 2024
    12:18 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த கஃபேவில் வெடிகுண்டை வைப்பதற்கு முன் குற்றவாளி ரவா இட்லியை ஆர்டர் செய்வது சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    28- 30 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேக நபர், குண்டு வெடிப்பு நடந்த பகுதிக்கு அருகில் நடமாடுவதை சிசிடிவியில் பார்க்க முடிந்தது.

    மேலும், அவர் சம்பவத்தின் போது முகமூடி அணிந்திருந்தார்.

    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நேற்று ஒரு குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு வெடித்தில், 10 பேர் காயமடைந்தனர்.

    இந்த குண்டு வெடிப்பு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தால் (IED) ஏற்பட்டிருக்கலாம் என்று உளவுத்துறை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.

    பெங்களூரு

    குண்டுவெடிப்புக்கு முன் சந்தேக நபர் செய்த காரியங்கள் 

    பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடந்து வரும் நிலையில், இதில் பயங்கரவாத தொடர்புகள் உள்ளதா என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    ராமேஸ்வரம் கஃபேவில் ரவா இட்லியை ஆர்டர் செய்த சந்தேக நபர், கூப்பனை மட்டுமே வாங்கினார் என்றும், உணவை சாப்பிடவில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    உணவகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், கஃபே வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் அருகே ஒரு சிங்க்கிற்கு கீழ் அவர் ஒரு பையை விட்டுச் சென்றார்.

    அதைத் தொடர்ந்து மதியம் 1:00 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

    சந்தேக நபர் பேருந்து மூலம் கஃபேவுக்கு வந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

    முக அடையாளம் காணும் மென்பொருளை பயன்படுத்தி சந்தேக நபரைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் முயற்சி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    பெங்களூர்

    பெங்களூரில் கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ்- ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காய்ச்சல் மாதிரிகள் வைரஸ்
    பெங்களூர்: வீட்டில் யாரும் இல்லாத போது பெண் அரசு ஊழியர் கத்தியால் குத்திக்கொலை கர்நாடகா
    பெங்களூரு பெண் அரசு ஊழியர் கொலை வழக்கில் பெரும் திருப்பம்: முக்கிய குற்றவாளியான டிரைவர் கைது  கர்நாடகா
    கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு: கடும் போக்குவரத்து பாதிப்பு கனமழை

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025