பாகிஸ்தானின் 33வது பிரதமராக பதவியேற்க உள்ளார் ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவர் ஷெபாஸ் ஷெரீப், இன்று இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், தேர்தலை முன்னிட்டு, ஷெபாஸ் ஷெரீப் தனது பிராட்மர் பதவிலையை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து, தேர்தல் முடியும் வரை நாட்டை கவனிக்க தற்காலிக அரங்கம் ஒன்று பதியேற்றது. 336 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் அவர் 201 வாக்குகளைப் பெற்றார், தனது போட்டியாளரான உமர் அயூப் கானை(92) தோற்கடித்தார். மூன்று வாரங்களுக்கு முன், பாகிஸ்தானில் தேசியத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், அதில் ஒரு கூட்டணி அரசாங்கம் வெற்றி பெற்றது.
இம்ரான் கானின் விடுதலைக்கு அழைப்பு விடுக்கும் சட்டமியற்றுபவர்கள்
பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP), பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI), மற்றும் PML-N ஆகியவை தேசிய சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டன. பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் (ECP) படி, சுயேச்சை வேட்பாளர்கள் 101 இடங்களையும், PML-N 75 இடங்களையும் வென்றனர். PPP 54 இடங்களையும், முட்டாஹிதா குமி இயக்கம்-பாகிஸ்தான்(MQM-P) 17 இடங்களையும் வென்றன. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவுடன் செயல்படும் சன்னி இத்தேஹாத் கவுன்சில்(SIC) ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டமியற்றுபவர்கள் இம்ரான் கானின் விடுதலைக்கு அழைப்பு விடுத்ததுடன், ஷெபாஸ் ஷெரீப் தேர்தலில் சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். பிப்ரவரி 8ஆம் தேதி நடந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.