விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 12வது ஆட்டத்தில் டிங் லிரனிடம் தோற்ற இந்திய வீரர் குகேஷ் 

2024 உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 12வது ஆட்டத்தில் இந்தியாவின் செஸ் ஜாம்பவான் குகேஷ் டி பெரும் பின்னடைவைச் சந்தித்தார்.

இயர் எண்டர் 2024: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அதிக தொகையைப் பெற்ற டாப் 5 வீரர்கள்

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) மெகா ஏலத்தில், உலகெங்கிலும் உள்ள சிறந்த திறமையாளர்களைப் பெறுவதற்காக அனைத்து 10 உரிமையாளர்களும் மில்லியன் கணக்கானவற்றைக் குவித்தனர்.

அடிலெய்டு டெஸ்டில் தவறாக நடந்து கொண்டதற்காக முகமது சிராஜ், டிராவிஸ் ஹெட்டிற்கு அபராதம் விதிப்பு

அடிலெய்டில் சமீபத்தில் முடிவடைந்த பகல்/இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அபராதம் விதித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அதிக சிக்ஸர்கள்; டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்தார் நிதீஷ் குமார் ரெட்டி

நிதீஷ் குமார் ரெட்டி இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, ​​சவாலான சூழ்நிலைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம், இந்தியாவுக்காக ஒரு சிறந்த செயல்திறன் மிக்க வீரராக உருவெடுத்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி நிகழ்வான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கி, கடந்த ஐந்தரை ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பதிவுசெய்த அணி என்ற சாதனையை வைத்திருந்த இந்தியாவை இங்கிலாந்து கிரிக்கெட் அணி பின்னுக்குத் தள்ளியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற எஞ்சியுள்ள வாய்ப்புகள் என்னென்ன? விரிவான அலசல்

இந்தியாவுக்கு எதிரான பிங்க்-பால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வி

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 8 முதல் 16 வரை 9 நாட்கள் 156 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

08 Dec 2024

பிசிசிஐ

ஜெய் ஷா வெளியேறியதைத் தொடர்ந்து பிசிசிஐ இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியா நியமனம் 

ஐசிசி தலைவர் பதவிக்கு ஜெய் ஷா மாறியதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இணை செயலாளர் தேவஜித் சைகியாவை அதன் செயல் செயலாளராக நியமித்துள்ளது.

வினோத் காம்ப்ளியின் மறுவாழ்வுக்கு உதவ தயார்; 1983 இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சார்பாக சுனில் கவாஸ்கர் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் நிதி மற்றும் மனநலம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் அவருக்கு உதவ உறுதி அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி விளையாடுவார் என தகவல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியின் போது இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு தயாராக உள்ளார்.

ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸிலிருந்து வெளியேறியதன் காரணம் இதுதான்; அணியின் புதிய பயிற்சியாளர் விளக்கம்

27 கோடிக்கு ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொண்ட வீரராக ரிஷப் பண்டின் பயணம் 18வது பதிப்பின் ஏலத்தின் போது பரவலான கவனத்தைத் தூண்டியது.

டெஸ்ட் கிரிக்கெட் 5 லட்சம் ரன்கள்; வரலாற்றில் யாரும் எட்டமுடியாத சாதனை படைத்தது இங்கிலாந்து

வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்தியது.

பிங்க்-பால் டெஸ்டில் அதிவேக சதம்; தனது சாதனையை தானே முறியடித்தார் டிராவிஸ் ஹெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டிராவிஸ் ஹெட் அடிலெய்டு பிங்க்-பால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில் சதமடித்து புதிய சாதனை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோல்டன் டக்கவுட் ஆன ஏழாவது இந்தியர் ஆனார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

அடிலெய்டு ஓவலில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்டின் தொடக்க நாளில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கால், இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: மிட்செல் ஸ்டார்க் அபார பந்துவீச்சு; 180 ரன்களுக்கு சுருண்டது இந்தியா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே, அடிலெய்டு ஓவலில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது போட்டியில், இந்தியா முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு சுருண்டது.

பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்குகிறது.

நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கு ஜஸ்ப்ரீத் பும்ராவின் பெயர் பரிந்துரை; இரண்டாவது முறையாக விருதைப் பெறுவாரா?

ஜஸ்ப்ரீத் பும்ரா பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 295 ரன்கள் வித்தியாசத்தில் அணியின் கேப்டனாக இருந்தபோது இந்தியா பெற்ற மாபெரும் வெற்றியில் அவரது அற்புதமான செயல்பாட்டிற்குப் பிறகு, வியாழன் அன்று (டிசம்பர் 4) நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கு மூன்று போட்டியாளர்களில் ஒருவராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

05 Dec 2024

ஐசிசி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 3 கோரிக்கைகளை நிராகரிக்கும் ஐசிசி; சாம்பியன்ஸ் டிராபியின் கதி என்ன?

ஐசிசியின் தலைவராக புதிதாக பொறுப்பேற்ற ஜெய் ஷாவால் அழைக்கப்பட்ட முக்கியமான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வாரியக் கூட்டம் வியாழக்கிழமை (டிசம்பர் 4) ஒத்திவைக்கப்பட்டது.

பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: ரோஹித் ஷர்மா மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளதாக அறிவிப்பு

பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 சீசனில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்கும் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பிங்க்-பாலில் நடைபெற உள்ளது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகாட்ச ஸ்கோர் அடித்து பரோடா அணி சாதனை 

வியாழன் (டிசம்பர் 5) அன்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தூரில் சிக்கிமுக்கு எதிராக 349/5 என்ற மகத்தான ரன் குவித்து, டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோரை பரோடா பதிவு செய்தது.

பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்; இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் விளையாடும் லெவனில் மாற்றம்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கான இரண்டாவது போட்டி அடிலெய்டில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்க உள்ளது.

பால்ய வயது நண்பன் வினோத் காம்ப்ளியின் பாடியதை கைதட்டி ரசித்த சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டின் ஐகான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளி ஆகியோர் ஹாரிஸ் ஷீல்ட் போட்டியில் 664 ரன்கள் எடுத்த சாதனைப் பங்களிப்பிற்காக ஒருமுறை கொண்டாடப்பட்டனர்.

தோனியுடன் பத்தாண்டுகளாக பேசவில்லை: ஹர்பஜன் சிங் பகீர் தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் நீண்டகாலமாக விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹே நண்பனே விட்டு செல்லாதே..! சச்சின் கைகளை இருக பற்றி கொண்ட வினோத் காம்ப்ளி

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், அவரது பால்ய நண்பர் வினோத் காம்ப்ளியும் டிசம்பர் 3ஆம் தேதி மும்பையில் தங்கள் பெரிச்சியாளரான பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை திறந்து வைத்தபோது உணர்ச்சிகரமான மறு சந்திப்பைப் பகிர்ந்து கொண்டனர்.

PV சிந்து திருமணம் செய்யவுள்ள வெங்கட தத்தா DC அணியை நிர்வகித்தவாரா? யார் அவர்?

இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு இம்மாதம் 22-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு இம்மாதம் திருமணம்!

இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு இம்மாதம் 22-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சரிந்து விழுந்த டென்னிஸ் வீரர்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

28 வயதான துருக்கிய டென்னிஸ் வீரர் ஆல்டக் செலிக்பிலெக், துனிசியாவில் நடந்த ஐடிஎப் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தின் போது சரிந்து விழுந்தார்.

யு19 ஆசிய கோப்பையில் 211 ரன்கள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

முகமது அமானின் நாட் அவுட் சதம் மூலம் திங்களன்று (டிசம்பர் 2) நடைபெற்ற யு19 ஆசிய கோப்பையில் ஜப்பானுக்கு எதிராக இந்தியா 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிங்க்-பால் டெஸ்ட் போட்டி: நான்கு ஆண்டுக்கு முந்தைய தோல்விக்கு பழி தீர்க்குமா இந்திய கிரிக்கெட் அணி

டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டு ஓவலில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிங்க்-பால் டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்க்க திட்டம்; உடற்தகுதியை ஆய்வு செய்கிறது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது மறுபிரவேசத்தை தொடர்வதால் அவரது உடற்தகுதியை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி வெற்றி

பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கான்பெராவில் உள்ள மனுகா ஓவலில் மழையால் பாதிக்கப்பட்ட பிங்க்-பால் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

FIDE ரேட்டிங்கில் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையை சமன் செய்தார் அர்ஜூன் எரிகைசி

இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) அன்று ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டினார்.

01 Dec 2024

ஜெய் ஷா

ஐசிசி தலைவராக பதவியேற்றார் ஜெய் ஷா; பெண்கள் விளையாட்டு மற்றும் உலகளாவிய வளர்ச்சியில் கவனம் செலுத்த திட்டம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக பிசிசிஐயின் முன்னாள் கவுரவ செயலாளர் ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் இங்கிலாந்தின் ஜோ ரூட்

ஹாக்லி ஓவலில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், ஜோ ரூட் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்

டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா இலங்கைக்கு எதிராக 233 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ​​புள்ளிகள் அட்டவணையில் பெரிய முன்னேற்றம் கண்டது.

2034 ஃபிஃபா உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது

சனிக்கிழமையன்று (நவம்பர் 30) வரலாற்று சிறப்புமிக்க ஏல மதிப்பீடுகளை பதிவு செய்த பின்னர் 2034 ஃபிஃபா உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலிய பிஎம் லெவன் vs இந்திய கிரிக்கெட் அணியின் முதல் நாள் பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து

ஆஸ்திரேலியாவின் பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இடைவிடாத மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

2025 சாம்பியன்ஸ் டிராபி திட்டமிட்டப்படி பாகிஸ்தானில் நடைபெறுமா? கூட்டத்தை ஒத்திவைத்தது ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இட சர்ச்சையைத் தீர்ப்பதற்கான அதன் முக்கியமான கூட்டத்தை ஒத்திவைத்துள்ளது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; 11 வீரர்களையும் பந்துவீச வைத்த டெல்லி கிரிக்கெட் அணி

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கிரிக்கெட் அணி வரலாறு படைத்துள்ளது.