பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட். இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் ஷர்மா நிதிஷ் ரெட்டி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்ஷித் ராணா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்.