ஹே நண்பனே விட்டு செல்லாதே..! சச்சின் கைகளை இருக பற்றி கொண்ட வினோத் காம்ப்ளி
செய்தி முன்னோட்டம்
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், அவரது பால்ய நண்பர் வினோத் காம்ப்ளியும் டிசம்பர் 3ஆம் தேதி மும்பையில் தங்கள் பெரிச்சியாளரான பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை திறந்து வைத்தபோது உணர்ச்சிகரமான மறு சந்திப்பைப் பகிர்ந்து கொண்டனர்.
இருவரும் மேடையில் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான சந்திப்பின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அச்ரேக்கரின் மாணவர்களான டெண்டுல்கர் மற்றும் காம்ப்ளி இருவரும் தங்கள் பள்ளி கிரிக்கெட் நாட்களில் உலக சாதனையான 664 ரன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி, அவர்களின் அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | Maharashtra: Former Indian Cricketer Sachin Tendulkar met former cricketer Vinod Kambli during an event in Mumbai.
— ANI (@ANI) December 3, 2024
(Source: Shivaji Park Gymkhana/ANI) pic.twitter.com/JiyBk5HMTB
நட்பு
'மந்தையிலிருந்து பிரிந்த இரண்டு ஆடுகள், மீண்டும் சந்தித்த போது...'
வைரலான ஒரு வீடியோவில், சச்சின், காம்ப்லியை வாழ்த்துவதற்காக முன்னே நடந்து வந்தார். கம்பளியோ, தனது பால்ய பருவ நண்பரின் கையை விட்டுவிட விருப்பமில்லாமல் தோன்றினார். இருவரும் சிறிது நேரம் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
டெண்டுல்கர் முன்னேற முயன்ற பிறகும், காம்ப்லி டெண்டுல்கரின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு தனது பிடியை விடுவிக்கத் தயங்கினார். மற்றொரு வீடியோவில், காம்ப்ளி டெண்டுல்கரை அன்புடன் கட்டித் தழுவி அவரது தலையைத் தொட்டார்.
டெண்டுல்கர் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, மிகவும் புகழ்பெற்ற தொழில்முறை வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்ட அதே நேரத்தில், காம்ப்ளியின் வாழ்க்கை மிகவும் ஏற்ற இறக்கமான பாதையை எடுத்தது. ஆயினும்கூட, இருவரும் நெருக்கமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.