PV சிந்து திருமணம் செய்யவுள்ள வெங்கட தத்தா DC அணியை நிர்வகித்தவாரா? யார் அவர்?
இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு இம்மாதம் 22-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை பி.வி.சிந்து திருமணம் செய்ய உள்ளார். உதய்ப்பூரில் நடைபெறவுள்ள திருமண விழாக்கள் டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கும். டிசம்பர் 24ஆம் தேதி ஹைதராபாத்தில் பிரமாண்ட திருமண வரவேற்பு நடைபெறும் என்று சிந்துவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஜனவரியில் சர்வதேச பேட்மிண்டன் சுற்றுக்கு சிந்து பயிற்சி சுற்றுகள் தொடங்குவதை அடுத்து டிசம்பரில் திருமணம் திட்டமிடப்பட்டுள்ளது என சிந்துவின் தந்தை தெரிவித்தார்.
சிந்துவின் வருங்கால கணவர் வெங்கட தத்தா சாய் ஐபிஎல் அணியை நிர்வகித்தவர்
அவரது தொழில்முறை வாழ்க்கையை JSW-இல் தொடங்கிய வெங்கட தத்தா, தனது பதவிக்காலத்தில் JSW க்கு சொந்தமான டெல்லி கேப்பிடல்ஸை நிர்வகித்தார். அவரது அனுபவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த தகவலை அவர் LinkedIn இல் குறிப்பிட்டுள்ளார். "ஐபிஎல் அணியை நிர்வகிப்பதை ஒப்பிடுகையில் நிதி மற்றும் பொருளாதாரத்தில் எனது BBA மந்தமாக உள்ளது, ஆனால் இந்த இரண்டு அனுபவங்களிலிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்." என அவர் அதில் குறிப்பாக எழுதியுள்ளார். தற்போது, அவர் Posidex Technologies இல் நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறார், அங்கு அவர் சந்தைப்படுத்தல், HR முயற்சிகள் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளை வழிநடத்துகிறார். வெங்கட தத்தா சாய், தரவு அறிவியல் மற்றும் இயந்திர கற்றலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.