06 Jul 2025
₹35,000 கோடி முதலீட்டில் 2030க்குள் 30 புதிய பயணிகள் வாகனங்களை வெளியிட டாடா மோட்டார்ஸ் திட்டம்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹33,000-35,000 கோடி பெரும் முதலீட்டில் அதன் தயாரிப்பு இலாகாவிலுள்ள முக்கியமான இடைவெளிகளை நிரப்ப டாடா மோட்டார்ஸ் ஒரு லட்சியத் திட்டத்தை அறிவித்துள்ளது.
2027 ஒருநாள் உலகக்கோப்பை வாய்ப்பையும் இழக்கிறதா வெஸ்ட் இண்டீஸ்? தரவரிசையில் பின்னடைவால் சிக்கல்
சமீபத்திய ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் 10வது இடத்திற்கு சரிந்ததால், 2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான பாதையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பெரும் பின்னடைவை எதிர்கொள்கிறது.
ஹபீஸ் சயீத், மசூத் அசாரை இந்தியாவுக்கு நாடு கடத்தி விடலாம் என பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கருத்து
நல்லெண்ண நடவடிக்கையாக ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் போன்ற மோசமான பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை பாகிஸ்தான் எதிர்க்காது என்று அறிவித்த பின்னர், முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி ஒரு புதிய அரசியல் புயலைத் தூண்டியுள்ளார்.
25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சீரியல் கொலையாளியை கைது செய்தது டெல்லி காவல்துறை
டெல்லி காவல்துறை ஒரு பிரபலமான சீரியல் கொலையாளியான அஜய் லம்பா என்ற பன்ஷியை கைது செய்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 13 பாலஸ்தீனியர்கள் பலி
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
BIS சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை மட்டுமே அணிய வேண்டும்; இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு புதுப்பிக்கப்பட்ட முயற்சியாக, நுகர்வோர் விவகாரத் துறை மற்றும் இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) இந்தியாவின் 21 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள் BIS-சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை மட்டுமே பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளன.
விம்பிள்டன் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் 100வது வெற்றி பெற்று நோவக் ஜோகோவிச் சாதனை
செர்பிய டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் மதிப்புமிக்க கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டனில் 100 ஒற்றையர் வெற்றிகளைப் பதிவு செய்த இரண்டாவது ஆடவர் மற்றும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஹாலிவுட் படங்கள் யூடியூப்பில் சட்டவிரோதமாக வெளியிடப்படுவதால் பல மில்லியன் இழப்பு என குற்றச்சாட்டு
டிஸ்னியின் லிலோ & ஸ்டிட்ச் ரீமேக் மற்றும் கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட் உள்ளிட்ட முக்கிய கோடைகால வெளியீடுகள் சட்டவிரோதமாக யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டதைக் கண்டறிந்த பிறகு, ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் புதுப்பிக்கப்பட்ட ஆன்லைன் திருட்டு அலையுடன் போராடி வருகின்றன.
ஜார்க்கண்டின் கிரிதியில் முஹர்ரம் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; மூன்று பேருக்கு காயம்
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) ஜார்க்கண்டின் கிரிதி மாவட்டத்தில் முஹர்ரம் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜூலை 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
காவல்துறை தாக்குதலில் பலியான அஜித் குமார் சகோதரர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி; காரணம் என்ன?
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் காவல்துறையினரின் கொடூர தாக்குதலில் பலியான அஜித் குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வருமான சமத்துவத்தில் உலகின் நான்காவது இடத்தில் இந்தியா; உலக வங்கி அறிக்கையில் தகவல்
உலக வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, உலகின் நான்காவது மிகவும் சமத்துவமான சமூகமாக இந்தியா உருவெடுத்து, ஒரு குறிப்பிடத்தக்க புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
நீரிழிவு நோயைத் தடுப்பதில் மெட்ஃபோர்மினை விட அதிக நன்மையைத் தரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை
தி லான்செட் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு மைல்கல் ஆய்வு, பரவலாக பரிந்துரைக்கப்பட்ட நீரிழிவு எதிர்ப்பு மருந்தான மெட்ஃபோர்மினை நம்புவதை விட ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வது நீரிழிவு நோயைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் கண்டறிந்துள்ளது.
INDvsENG 2வது டெஸ்ட்: கேப்டனாக எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ஷுப்மன் கில்
இந்தியாவின் இளம் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், நடந்து கொண்டிருக்கும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி 2025 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தனது அசாதாரண ஃபார்மால் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
ராய்ட்டர்ஸின் எக்ஸ் கணக்கை முடக்க உத்தரவிடவில்லை என மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள சமூக ஊடக கணக்கை முடக்க எந்த சட்டப்பூர்வ உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) தெளிவுபடுத்தியது.
திருமணமான சில மணி நேரங்களில் காதலனுடன் ஓட்டம் பிடித்த புது மணப்பெண்; சென்னையில் சோகம்
திருமண நடந்த சில மணி நேரங்களில் புதுமணப் பெண் கணவனுக்கு டாடா காட்டிவிட்டு தனது காதலனுடன் ஓடிப்போன சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் அல்லது எப்1 மாதிரியான ஹாலிவுட் படங்களில் நடிக்க நடிகர் அஜித் ஆர்வம்
தமிழ் சினிமா நடிகர் அஜித் குமார் ஹாலிவுட் படங்களில், குறிப்பாக ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் போன்ற படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
INDvsENG 2வது டெஸ்ட்: ஐந்தாவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு
எட்ஜ்பாஸ்டனில் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி 2025 இன் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக மறக்க முடியாத வெற்றியைப் பெறும் முனைப்பில் இந்தியா உள்ளது.
ராய்ட்டர்ஸ் ஊடகத்தின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கம்; காரணம் என்ன?
சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (ஜூலை 5) இரவு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவிப்பு
எதிர்பாராத அரசியல் திருப்பமாக, பில்லியனர் தொழில்முனைவோர் எலான் மஸ்க் அமெரிக்கா கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
05 Jul 2025
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது
இந்திய அமலாக்க நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக, வெளிநாட்டிற்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி, வெள்ளிக்கிழமை (ஜூலை 4) அன்று அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மே மாதத்திற்குப் பிறகு பொதுவெளியில் தென்படாத ஜி ஜின்பிங்; ஆட்சிக் கவிழ்ப்பு அச்சத்தால் பதுங்கிவிட்டாரா?
கடந்த மே மாத இறுதியில் இருந்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருப்பது, சீனாவை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நிலவும் உள் அதிகாரப் போராட்டம் குறித்த தீவிர ஊகங்களைத் தூண்டியுள்ளது.
ஜூலை 15 அன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்களைத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ஜூலை 15 அன்று சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
கேப்டனாக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்து விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஷுப்மன் கில்
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் எலும்பு மற்றும் நுண் பாசிகள் குறித்து சுபன்ஷு சுக்லா ஆய்வு
ஆக்ஸியம்-4 மிஷன் பைலட்டாக பணியாற்றும் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) முக்கியமான சுகாதாரம் மற்றும் நிலைத்தன்மை ஆராய்ச்சியை முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
புதுப்பிக்கப்பட்ட டோமினார் 400 மற்றும் டோமினார் 250 மாடல்களை அறிமுகம் செய்தது பஜாஜ்; சிறப்பம்சங்கள் என்னென்ன?
சுற்றுலா செல்வதற்கான வசதி மற்றும் சவாரி அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் பஜாஜ் ஆட்டோ அதன் பிரபலமான டோமினார் 400 மற்றும் டோமினார் 250 மோட்டார் சைக்கிள்களின் புதுப்பிக்கப்பட்ட மாடல்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் பருவமழை பாதிப்பால் 72 பேர் பலி; 500க்கும் மேற்பட்ட சாலைகள் சேதம்
இடைவிடாத மழை மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் மூலம் பரவலான பேரழிவை ஏற்படுத்தியதால், இமாச்சலப் பிரதேசம் கடுமையான பருவமழை நெருக்கடியை எதிர்கொள்கிறது.
நடிகர் தர்சனின் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
நடிகர் தர்ஷனின் வரவிருக்கும் திரைப்படம் ஹவுஸ் மேட்ஸ் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோர் அதிகம் விரும்பிக் குடிப்பவரா நீங்கள்? இந்த ஆபத்துகளையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க
மிகவும் பிரபலமான மற்றும் சத்தான பால் பொருட்களில் ஒன்றான மோர், இந்திய உணவுமுறைகளில் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 5) ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட்+ பாதுகாப்பு வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம்
சமீபத்திய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக தலைவருமான எடப்பாடி கே பழனிசாமிக்கு (இபிஎஸ்) இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தால் இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் பிரமுகரை திருமணம் செய்து ஏமாற்றிய நிகிதா? தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் குற்றச்சாட்டு
திருபுவனம் காளி கோயில் காவலர் அஜித் குமார் கொலை வழக்கில் ஒரு பரபரப்பான திருப்பமாக, வழக்குடன் தொடர்புடைய நகைகள் காணாமல் போனதாக கூறப்படும் முக்கிய புகார்தாரரான நிகிதா மீது தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
கேஒய்சி அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டுகள் செல்லாதா? தமிழக அரசு விளக்கம்
ஜூன் 30 ஆம் தேதிக்குள் கைரேகை விவரங்கள் புதுப்பிக்கப்படாவிட்டால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
INGvsENG 2வது டெஸ்ட்: பெரிய ஸ்கோர் அடித்தும் மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து
எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் யூனிட் மோசமான காரணத்திற்காக அதன் பெயரை சாதனை புத்தகங்களில் பொறித்துள்ளது.
கிராமுக்கு ₹10 உயர்வு; இன்றைய (ஜூலை 5) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக் கிழமை (ஜூலை 5) விலை உயர்வை சந்தித்துள்ளது.
விமான இயந்திர பாகங்களை மாற்றுவதில் தவறு; DGCA தணிக்கைக்குப் பிறகு ஒப்புக்கொண்ட ஏர் இந்தியா
இந்தியாவின் விமான ஒழுங்குமுறை ஆணையமான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கடுமையாக கண்டித்ததைத் தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதன் ஏர்பஸ் ஏ320 விமானங்களில் ஒன்றின் இயந்திர பாகங்களை மாற்றுவதில் ஏற்பட்ட பிழையை ஒப்புக்கொண்டது.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; 25 பந்துகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை
மகளிர் கிரிக்கெட்டில் கென்னிங்டன் ஓவலில் நடந்த இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாதனை புத்தகங்களில் தனது பெயரைப் பொறித்தது.
மசூத் அசார் எங்க இருக்கார்னே பாகிஸ்தானுக்கு தெரியவில்லையாம்; சொல்கிறார் பிலாவல் பூட்டோ
ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் இருக்கும் இடம் பாகிஸ்தானிற்குத் தெரியாது என்றும், இந்தியா நம்பகமான உளவுத்துறை தகவலை வழங்கினால் அவரைக் கைது செய்வதில் மகிழ்ச்சியடைவேன் என்றும் பாகிஸ்தான் அரசியல்வாதி பிலாவல் பூட்டோ ஜர்தாரி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பெரிய அளவிலான வரி குறைப்புக்கள் மற்றும் செலவு குறைப்புக்கள் தொகுப்பில் டிரம்ப் கையெழுத்து
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜூலை நான்காம் தேதியை ஒரு பெரிய வெற்றியுடன் கொண்டாடியுள்ளார்.
குரோஷியாவில் நடந்த 2025 கிராண்ட் செஸ் டூர் ரேபிட் பிரிவில் முதலிடம் பிடித்து பட்டம் வென்றார் டி.குகேஷ்
வெள்ளிக்கிழமை (ஜூலை 4) குரோஷியாவின் ஜாக்ரெப்பில் நடந்த கிராண்ட் செஸ் டூர் (GCT) 2025 ரேபிட் & பிளிட்ஸ் போட்டியில் ரேபிட் பட்டத்தை வென்றதன் மூலம் இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டினார்.