Page Loader
INDvsENG 2வது டெஸ்ட்: ஐந்தாவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு
ஐந்தாவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு

INDvsENG 2வது டெஸ்ட்: ஐந்தாவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 06, 2025
09:19 am

செய்தி முன்னோட்டம்

எட்ஜ்பாஸ்டனில் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி 2025 இன் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக மறக்க முடியாத வெற்றியைப் பெறும் முனைப்பில் இந்தியா உள்ளது. இரு இன்னிங்ஸ்களிலும் சிறப்பான பேட்டிங் மூலம், இந்திய அணி 608 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இங்கிலாந்து அணி நான்காம் நாள் முடிவில் 72/3 என்ற நிலையில் இருக்கும் சூழலில், வெற்றிக்கு இன்னும் 536 ரன்கள் தேவை மற்றும் இங்கிலாந்தின் கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன.

வானிலை

வானிலை நிலவரத்தால் நிச்சயமற்ற தன்மை 

இருப்பினும், ஐந்தாவது நாளில் வானிலை கணிக்க முடியாத பாத்திரத்தை வகிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை முன்னறிவிப்பின்படி, அதிகாலையில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. மழைக்கான வாய்ப்பு இங்கிலாந்தின் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு 79% ஆக இருக்கும் நிலையில், பிற்பகல் 1 மணிக்குள் 22% ஆகக் குறைகிறது. இறுதி நாள் ஆட்டம் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது, ஆனால் மழையால் போட்டியில் இடையூறு ஏற்பட்டு, கணிசமான ஓவர்கள் இழந்தால் இங்கிலாந்து டிரா செய்வதற்கே அதிக வாய்ப்புள்ளது. எனினும்,ஹெடிங்லியில் பெற்ற தோல்விக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த போட்டியில் எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய கிரிக்கெட் அணி உள்ளது.