Page Loader
கிராமுக்கு ₹10 உயர்வு; இன்றைய (ஜூலை 5) தங்கம் வெள்ளி விலை நிலவரம் 
இன்றைய (ஜூலை 5) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

கிராமுக்கு ₹10 உயர்வு; இன்றைய (ஜூலை 5) தங்கம் வெள்ளி விலை நிலவரம் 

எழுதியவர் Sekar Chinnappan
Jul 05, 2025
10:15 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக் கிழமை (ஜூலை 5) விலை உயர்வை சந்தித்துள்ளது. சனிக் கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹10 உயர்ந்து ₹9,060 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹80 அதிகரித்து ₹72,480 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹10 உயர்ந்து ₹9,883 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹80 அதிகரித்து, ₹79,064 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

இதற்கிடையே, 18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராமுக்கு ₹5 அதிகரித்து ₹7,475 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹40 அதிகரித்து ₹59,800 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் முந்தைய நாளின் விலையே நீடிக்கிறது. வெள்ளி விலை சனிக் கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ₹120 ஆகவும், ஒரு கிலோ ₹1,20,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் நீடிக்கும் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.