Page Loader

இந்திய ராணுவம்: செய்தி

பாகிஸ்தானின் அணு உலையை இந்தியா தாக்கியதா: IAF விளக்கம்

பாகிஸ்தானில் உள்ள கிரானா ஹில்ஸில் உள்ள அணுசக்தி நிலையத்தை இந்திய ஆயுதப் படைகள் குறிவைக்கவில்லை என்பதை விமானப்படை நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி திங்களன்று உறுதிப்படுத்தினார்.

12 May 2025
இந்தியா

அச்சுறுத்தல் விடுக்கும் எவரையும் எதிர்கொள்ள முழுமையாக தயார்: ராணுவ தளபதி

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை (மே 12) இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

12 May 2025
இந்தியா

இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை (மே 12) இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

12 May 2025
இந்தியா

இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்

முறையே, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் மற்றும் மேஜர் ஜெனரல் காஷிஃப் சவுத்ரி ஆகியோர் இன்று மதியம் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

ஆப் சிந்தூரில், கராச்சியைத் தாக்க இந்திய கடற்படை தயாராக இருந்தது: துணை அட்மிரல்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ பழிவாங்கல் நடவடிக்கையைத் தொடங்கியபோது, ​​இந்திய கடற்படை கராச்சி உட்பட கடலிலும் நிலத்திலும் உள்ள குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்கும் முழுத் திறனுடனும், தயார் நிலையில் இருந்ததாகவும் இருந்ததாக வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

11 May 2025
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெற்ற அரிய முப்படை செய்தியாளர் சந்திப்பில், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பதிலடி ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் பற்றிய முக்கிய விவரங்களை வெளியிட்டனர்.

11 May 2025
இந்தியா

இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது

இந்திய ஆயுதப் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) மாலை 6:30 மணிக்கு கூட்டு செய்தியாளர் சந்திப்பை தொடங்கியுள்ளனர்.

போர் நிறுத்தத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது

பல நாட்களாக நீடித்த பதற்றம் மற்றும் கடுமையான ஷெல் தாக்குதலுக்குப் பிறகு, மே 11 ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற எல்லைப் பகுதிகளில் ஒப்பீட்டளவில் அமைதி காணப்பட்டது.

பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்; பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலுக்கு இந்தியா தரமான பதிலடி?

பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்களுக்கு விரைவான மற்றும் தீர்க்கமான பதிலடியாக, சனிக்கிழமை (மே 10) இரவு இந்தியா பதிலடி தாக்குதல்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி

அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, எல்லையில் மீண்டும் போர் நிறுத்த மீறலை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

10 May 2025
இந்தியா

தாக்குதல் மட்டும்தான் நிறுத்தம்; போர் நிறுத்தத்திற்கு பிறகு இந்திய அரசு சொன்னது என்ன?

குறிப்பிடத்தக்க ராஜதந்திர திருப்புமுனையாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை, அமெரிக்க மத்தியஸ்த உயர் மட்ட விவாதங்களைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.

10 May 2025
போர்

போர் மூண்டால் எப்படி அதிகாரப்பூர்வமாக இந்தியா அறிவிக்கும்? கடந்த கால வரலாறும், தற்போதைய சூழலும்

உயர்ந்த பதட்டங்களுக்கு மத்தியில், ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூரில் உள்ள இந்திய இராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

பாகிஸ்தான் எல்லையை நோக்கி ராணுவ வீரர்களை முன்னோக்கி நகர்த்த தொடங்கியதாக தகவல்

பதட்டங்கள் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச எல்லையில் ராணுவ நிலைகளை முன்னோக்கி நகர்த்த பாகிஸ்தான் தனது துருப்புக்களை நகர்த்தியுள்ளதாக இந்திய அரசாங்கம் சனிக்கிழமை (மே 10) உறுதிப்படுத்தியது.

இந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டாரா? உண்மை இதுதான்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமூக ஊடகங்களில் நிறைய தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

பாகிஸ்தானின் சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப்

மே 9 அன்று பாகிஸ்தானின் சியால்கோட் செக்டாரில் உள்ள பயங்கரவாத ஏவுதளத்தை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அழித்ததால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்தது.

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் பலத்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன.

09 May 2025
பஞ்சாப்

பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம்

வெள்ளிக்கிழமை (மே 9) இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களை அனுப்பியதால் மீண்டும் பதற்றம் அதிகரித்தது.

ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை

எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை (மே 9) இரவு ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

09 May 2025
இந்தியா

இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் விரோதப் போக்குகளுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை முக்கியமான எல்லைப் பகுதிகளில் பல பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டன.

09 May 2025
இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்?

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவசரகாலங்களில் வழக்கமான இந்திய இராணுவத்தை ஆதரிக்கும் ஒரு ரிசர்வ் படையான பிராந்திய இராணுவத்தை (TA) அழைக்க இராணுவத் தளபதிக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

09 May 2025
இந்தியா

நேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல்

நேற்றிரவு 8.00 மணி முதல் 11.30 மணி வரை, இந்தியாவின் பல நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஒரே நேரத்தில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

09 May 2025
இந்தியா

இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்பு அரண்: பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா எவ்வாறு முறியடித்தது?

மே 8-9 இடைப்பட்ட இரவில் பாகிஸ்தானின் மேற்கு எல்லை முழுவதும் நடத்தப்பட்ட ஒரு பெரிய ட்ரோன் தாக்குதலை இந்தியப் படைகள் திறம்பட முறியடித்தன.

09 May 2025
கர்நாடகா

இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள்; கர்நாடக அரசு அறிவிப்பு

ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ள இந்திய ஆயுதப்படைகளுக்கு மாநில அளவிலான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, கர்நாடக அரசு மசூதிகளில் சிறப்பு வெள்ளிக்கிழமை (மே 9) தொழுகைகளையும் பெங்களூருவில் ஒரு அடையாள கொடி அணிவகுப்பையும் அறிவித்துள்ளது.

2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த மத்திய அரசு உத்தரவு

இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கில், வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு கட்டளைகளில் உள்ள டெரிட்டோரியல் ஆர்மி எனப்படும் பிராந்திய ராணுவ காலாட்படையின் 32 பட்டாலியன்களில் 14 ஐ 2028 வரை நிலைநிறுத்த பாதுகாப்பு அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

ராணுவ நடவடிக்கைகளை லைவ் கவரேஜ் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுரை

இந்திய ராணுவ நடவடிக்கைகள் மற்றும் துருப்புக்களின் நடமாட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்வதிலோ அல்லது லைவ் அறிக்கைகளை வெளியிடுவதிலோ ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தி, அனைத்து ஊடக நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மே 9) ஒரு முக்கியமான ஆலோசனையை வெளியிட்டது.

09 May 2025
இந்தியா

பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன?

வியாழக்கிழமை இரவு பாகிஸ்தானின் தூண்டுதலற்ற தாக்குதல் கடுமையான பதிலடியை சந்தித்தது.

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு

பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக, இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை நகரில் பேரணி நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் இரவு நேர ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு 'தக்க பதிலடி கொடுக்கப்பட்டது': இந்திய ராணுவம் 

ஜம்மு- காஷ்மீரின் மேற்கு எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) வழியாக பாகிஸ்தான் ஆயுதப் படைகள் நடத்திய பல ஒருங்கிணைந்த ட்ரோன் மற்றும் missile தாக்குதல்களை இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை காலை வெற்றிகரமாக முறியடித்ததாக தெரிவித்துள்ளது.

09 May 2025
சண்டிகர்

விமான தாக்குதல் சைரன்கள் ஒலிப்பு; ட்ரோன்கள் அச்சுறுத்தலால் உச்ச கட்ட எச்சரிக்கையில் சண்டிகர்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நகரம் முழுவதும் விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததால், சண்டிகர் யூனியன் பிரதேசம் வெள்ளிக்கிழமை (மே 9) காலை உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.

09 May 2025
இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடாது என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஜம்மு, ஜெய்சால்மர் மற்றும் பதான்கோட் உள்ளிட்ட இந்திய நகரங்கள் மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்த பின்னர், வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் சியால்கோட் ஆகிய இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது.

08 May 2025
இந்தியா

இந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல்

பாகிஸ்தானுடனான போர் பதற்றத்திற்கு மத்தியில், பாகிஸ்தானின் முக்கிய துறைமுகமான கராச்சி துறைமுகத்தில் இந்தியா ஒரு பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

ஜம்முவின் அக்னூரில் பாகிஸ்தானின் F-16 விமானியை சிறைபிடித்த இந்திய ராணுவம்

ஜம்முவின் அக்னூரில், தனது போர் விமானத்தில் இருந்து குதித்த பாகிஸ்தான் விமானப்படை விமானி இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

3 இந்திய ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை-ட்ரோன் தாக்குதல்

ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்திய பாதுகாப்புப் படைகள் வியாழக்கிழமை முறியடித்தன.

உச்சகட்ட பீதி; இந்தியாவின் பதிலடியைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களையும் மூடிய பாகிஸ்தான் 

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கொடுத்த பதிலடியைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்ச கட்டத்தில் உள்ளது.

08 May 2025
இந்தியா

பாகிஸ்தான் நிறுத்தாதவரை பதிலடி தாக்குதல் தொடரும்; மத்திய அரசு உறுதி

இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக கடுமையாக இந்தியா பதிலடி கொடுக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 8) மீண்டும் உறுதிப்படுத்தியது.

ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தற்கொலை ட்ரோன்கள்; ஸ்கைஸ்ட்ரைக்கர்ஸின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ஸ்கைஸ்ட்ரைக்கர்ஸ் என்று அழைக்கப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தற்கொலை ட்ரோன்கள், எல்லையைத் தாண்டி இந்திய ராணுவத்தின் சமீபத்திய உயர்-துல்லிய பயங்கரவாத எதிர்ப்புப் பணியான ஆபரேஷன் சிந்தூரில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

 S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது?

ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான், இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முற்பட்டது.

08 May 2025
இந்தியா

பாகிஸ்தானின் வான்வழி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த இந்தியா

மே 7-8 தேதிகளில் வடக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் பல இராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.