NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தானின் சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானின் சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப்
    சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப்

    பாகிஸ்தானின் சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 10, 2025
    11:29 am

    செய்தி முன்னோட்டம்

    மே 9 அன்று பாகிஸ்தானின் சியால்கோட் செக்டாரில் உள்ள பயங்கரவாத ஏவுதளத்தை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அழித்ததால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்தது.

    ஜம்மு செக்டாரில் உள்ள பிஎஸ்எஃப் நிலைகள் மீது பாகிஸ்தான் இரவு 9:00 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்த பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது.

    அக்னூர் பகுதிக்கு எதிரே உள்ள லூனி ஏவுதளம் உட்பட பாகிஸ்தான் ரேஞ்சர்களின் நிலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளில் பிஎஸ்எஃப்பின் வலுவான எதிர் தாக்குதல் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது.

    அதே நேரத்தில், சனிக்கிழமை (மே 10) அதிகாலை பஞ்சாபின் அமிர்தசரஸில் ஒரு பெரிய ட்ரோன் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.

    இது நாட்டின் மேம்பட்ட வான் பாதுகாப்பு தயார்நிலையை எடுத்துக்காட்டுகிறது.

    வான் பாதுகாப்பு

    பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள்

    தோராயமாக காலை 5 மணியளவில், காசா கன்டோன்மென்ட் மீது பாகிஸ்தானில் இருந்து பல ஆயுதமேந்திய ட்ரோன்கள் கண்டறியப்பட்டன. உடனடியாக வான் பாதுகாப்புப் பிரிவுகளால் அவை வீழ்த்தப்பட்டன.

    கூடுதல் பொது தகவல் இயக்குநரகத்தின் (ADG PI) அறிக்கையின்படி, இந்த ஆத்திரமூட்டல்கள் பாகிஸ்தானின் தொடர்ச்சியான தீவிரப்படுத்தலின் ஒரு பகுதியாகும்.

    இதில் இந்தியாவின் மேற்கு எல்லை முழுவதும் பொதுமக்கள் பகுதிகளை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும்.

    ராணுவத்தின் பதில் நடவடிக்கை, சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்த செய்த ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ராணுவம்
    இந்தியா
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    பாகிஸ்தானின் சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப் பாகிஸ்தான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல் விராட் கோலி
    அமெரிக்காவுக்கு போன் போட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்; மத்தியஸ்தம் செய்ய உதவுவதாக அமெரிக்கா அறிவிப்பு அமெரிக்கா
    பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி மரணம் ஜம்மு காஷ்மீர்

    பாகிஸ்தான்

    14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பலோச் விடுதலை ராணுவம் பலுசிஸ்தான்
    பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் அதிகரிக்கும் பதட்டம்; விமான நிலையங்கள், பள்ளிகள் மூடல் பஞ்சாப்
    தொடரும் ஆபரேஷன் சிந்தூர்: இந்திய தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்
    'ஒவ்வொரு அநீதிக்கும் பழிவாங்குவோம்': ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் அல்-கொய்தா மிரட்டல்  அல் கொய்தா

    பாகிஸ்தான் ராணுவம்

    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்
    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான்
    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்

    இந்தியா

    இந்திய யாத்ரீகர்களுக்கான கர்தார்பூர் வழித்தடத்தை மூடிய பாகிஸ்தான் கர்தார்பூர் வழித்தடம்
    இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்களை எவ்வாறு பாதிக்கும் வாகனம்
    லாகூர், கராச்சியில் பறந்த 12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவிப்பு பாகிஸ்தான்
    இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்கிறதா சவுதி அரேபியா? வெளியுறவு அமைச்சர் திடீர் வருகையின் பின்னணி என்ன? சவுதி அரேபியா

    இந்திய ராணுவம்

    எல்லை கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து 8வது நாளாக போர்நிறுத்த மீறல்; இந்திய ராணுவம் பதிலடி பாகிஸ்தான்
    மீண்டும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்தியா கடும் பதிலடி ஜம்மு காஷ்மீர்
    ரஷ்யாவின் புதிய இக்லா-எஸ் ஏவுகணைகளை வாங்கியது இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்
    'ஆபரேஷன் சிந்தூர்': பஹல்கம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதல் பஹல்காம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025