
இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் பலத்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன.
அதிகாலை 4:30 மணியளவில் ஜம்மு நகரில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டன என ANI செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை அடுத்து நகரம் முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. உதம்பூரின் டிப்பர் பகுதியிலும் வெடிச்சத்தம் கேட்டது.
செய்தி நிறுவனமான ANI பகிர்ந்து கொண்ட ஒரு காணொளியில் புகை எழுவதையும், காற்று சைரன்கள் ஒலிப்பதையும் காணலாம்.
அக்னூர், குரேஸ், உரி, ஹமிர்பூர் மற்றும் பல்லன்வாலா ஆகிய இடங்களில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து கடுமையான ஷெல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | Jammu & Kashmir | Smoke is seen rising after a loud explosion from Dibber area, Udhampur. Air Sirens are being played. pic.twitter.com/UcUrdRb4Pt
— ANI (@ANI) May 10, 2025
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
J-K: Blackout imposed in Akhnoor; explosions, sirens reported
— ANI Digital (@ani_digital) May 10, 2025
Read @ANI Story | https://t.co/oNBFeYUMLj#Akhnoor #blackout #JammuandKashmir #sirens pic.twitter.com/KRvWTB6uzH
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | Jammu & Kashmir | Continuous explosions are audible in the Poonch area.
— ANI (@ANI) May 10, 2025
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/kT3oqKAkIY
பாக்., தாக்குதல்
இந்தியாவில் எல்லை தாண்டிய தாக்குதலை தொடரும் பாகிஸ்தான்
வெள்ளிக்கிழமை (மே 9) இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களை அனுப்பியதால் மீண்டும் பதற்றம் அதிகரித்தது.
இதற்கு இந்திய பாதுகாப்புப் படையினர் உடனடி மற்றும் உறுதியான பதிலடியைக் கொடுத்தனர்.
கடுமையான மோதலில், பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ட்ரோன்களில் ஒன்று வெடிபொருளை வீசியது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்த வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இதனையடுத்து இன்று அதிகாலையில், இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் பாகிஸ்தானின் மூன்று விமானப்படை தளங்களை தாக்கியதாக பாகிஸ்தான் கூறியது.