
மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி
செய்தி முன்னோட்டம்
அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, எல்லையில் மீண்டும் போர் நிறுத்த மீறலை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்தின் கட்ச் எல்லையில் உள்ள ஹராமி நாலா மற்றும் காவ்டா பகுதிகளுக்கு அருகே பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டன.
அதே நேரத்தில் ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லாவில் பலத்த வெடிப்புகள் ஏற்பட்டதாகவும், அங்கு ட்ரோன்கள் மற்றும் அடையாளம் தெரியாத வான்வழி வாகனங்கள் இந்திய பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீரங்கி தாக்குதல்
பல இடங்களில் பீரங்கி தாக்குதல்
இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல்கள் (DGMOக்கள்) இடையே இந்திய நேரப்படி பிற்பகல் 3:35 மணிக்கு அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் மாலை 5 மணி முதல் நிறுத்துவதாக ஒப்பந்தம் எட்டப்பட்டது.
எனினும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) மற்றும் சர்வதேச எல்லை (IB) ஆகியவற்றில் பல இடங்களில் போர் நிறுத்த மீறல்கள் பதிவு செய்யப்பட்டன.
ஜம்முவின் அக்னூர், ரஜோரி, ஆர்எஸ் புரா மற்றும் பலன்வல்லா செக்டர்களில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, எந்தவொரு ஆத்திரமூட்டலுக்கும் முழு பலத்துடன் பதிலடி கொடுக்க இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) அறிவுறுத்தப்பட்டது.