
பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்ட இந்தியா
செய்தி முன்னோட்டம்
இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது.
இதனையடுத்து சற்றுமுன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பாகிஸ்தான் ராணுவத்தின் போர் நிறுத்த மீறல்கள் குறித்து வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
"இந்த ஊடுருவல் மிகவும் கண்டிக்கத்தக்கது, இதற்கு பாகிஸ்தான் பொறுப்பு. பாகிஸ்தான் இந்த சூழ்நிலையை சரியாகப் புரிந்துகொண்டு உடனடியாக இந்த ஊடுருவலை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று மிஸ்ரி கூறினார்.
எனினும் இந்த போர் நிறுத்த மீறல்களுக்கு ராணுவம் கடுமையான முறையில் பதிலளிக்கும் என்று வெளியுறவு செயலாளர் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | Delhi: Foreign Secretary Vikram Misri says, "The Armed Forces are maintaining a strong vigil on the situation and have been given instructions to deal strongly with any instances of repetition of the violations of the borders along the international border as well as the… pic.twitter.com/35qhh0AFWU
— ANI (@ANI) May 10, 2025
போர் நிறுத்தம்
பரஸ்பர போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரத்திலேயே தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான்
அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பர போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, எல்லையில் மீண்டும் போர் நிறுத்த மீறலை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்தின் கட்ச் எல்லையில் உள்ள ஹராமி நாலா மற்றும் காவ்டா பகுதிகளுக்கு அருகே பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டன.
அதே நேரத்தில் ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லாவில் பலத்த வெடிப்புகள் ஏற்பட்டதாகவும், அங்கு ட்ரோன்கள் மற்றும் அடையாளம் தெரியாத வான்வழி வாகனங்கள் இந்திய பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.