ஈரான்: செய்தி
தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் ஈரானின் உச்ச தலைவரை சிஐஏ, மொசாட் அமைப்புகள் தேடி வருகின்றன: அறிக்கை
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியை கண்டுபிடிப்பதற்காக, மத்திய புலனாய்வு முகமையும் (சிஐஏ) இஸ்ரேலின் மொசாட் அமைப்பும் ஒரு பெரும் சவாலான பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு ஆசிய மோதலில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் போர் சூழலில் சிக்கி இதுவரை 10 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் மீண்டும் அமெரிக்க விமானப்படை தாக்குதல்: மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர் மேகம்
மேற்கு ஆசியாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: ஈரான் மற்றும் ஓமன் இடையே முரண்பாடு; என்ன நடக்கிறது?
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிபொருள் போக்குவரத்தில் மிக முக்கியமான கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தியை எதிர்காலத்தில் எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமன் நாடுகள் தங்களுக்குள் புதிய முன்மொழிவுகளைப் பரிமாறிக் கொண்டுள்ளன.
அமைதிக்கு இடையே ஈரானின் திடீர் ஏவுகணைத் தாக்குதல்; பதிலடி கொடுத்த அமெரிக்கா - சவூதி கூட்டணி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில், ஈரானின் திடீர் ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் சவூதி அரேபிய படைகள் ஈராக்கில் கூட்டுத் தாக்குதலை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
'அடுத்த இலக்கு நீங்கள் தான்': அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா மற்றும் மகனுக்கு ஈரானில் இருந்து கொலை மிரட்டல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடும்பத்தைக் குறிவைத்து, ஈரான் ஆதரவு அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ள புதிய அச்சுறுத்தல் வீடியோ உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோற்றால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லேசான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக அமைதி: ஹார்முஸ் ஜலசந்தி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமடைந்திருந்த இராணுவ மோதல்கள், தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஈரான் மீதான தாக்குதல் திடீர் நிறுத்தம்! அமெரிக்காவுக்கு ஏவுகணை தட்டுப்பாடா?
ஈரான் மீதான தொடர் 13 நாள் வான்வழித் தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென நிறுத்தி வைத்துள்ள நிலையில், அமெரிக்கப் படைகளிடம் ஏவுகணைகளின் இருப்பு கணிசமாகக் குறைந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்று புதிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹவுத்திகள் ஏவுகணைத் தாக்குதல்! அமெரிக்கா தாக்குதலை நிறுத்தக் காரணம் என்ன?
ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் ஜீசான் மற்றும் யான்பு நகரில் உள்ள தளங்களை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தது ஈரான்: தீவிரமடையும் பதற்றம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுப்பிய புதிய போர் நிறுத்த முன்மொழிவை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஈரானிய சொத்துகளை பறிமுதல் செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவு: ஈரானிய வெளியுறவு அமைச்சர் கடும் எச்சரிக்கை
வளைகுடா பகுதியில் தாக்குதல்களால் சேதமடைந்த கப்பல்கள் மற்றும் சரக்குகளுக்கான இழப்பீட்டை, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானின் முடக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
'நாங்கள் எண்ணெய் விற்காவிட்டால், வேறு யாரும் விற்க விட மாட்டோம்': ஈரான் எச்சரிக்கை
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், பிராந்திய எரிசக்தி விநியோகத்தை சீர்குலைப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான போர் விரிவடைகிறதா? மத்திய கிழக்கிற்கு கூடுதல் படைகள், போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு கூடுதல் படைகள், மருத்துவக் குழுக்கள் மற்றும் அதிநவீன ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது.
அமெரிக்கா - ஈரான் போர்: $37.5 பில்லியனைத் தாண்டிய ராணுவச் செலவு; கூடுதல் நிதி கோரும் பென்டகன்
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்காக இதுவரை $37.5 பில்லியன்(சுமார் ₹3.1 லட்சம் கோடிக்கும் அதிகம்) செலவிடப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அந்நாட்டு நாடாளுமன்ற எம்பிக்களிடம் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தைச் சமாளிக்க அமெரிக்காவிடம் $10 பில்லியன் நிதி உதவி கோரிய பாகிஸ்தான்
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், தனது அந்நியச் செலாவணி கையிருப்பை பலப்படுத்தவும், நாணயத்தின் மதிப்பை காப்பாற்றவும் அமெரிக்காவிடம் $10 பில்லியன் (சுமார் ₹83,000 கோடிக்கும் அதிகம்) மதிப்புள்ள அவசரகால நிதி உதவியைக் கோரியுள்ளது.
சவூதி மீதான ஹூதிகளின் கடற்படை முற்றுகை உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்குமா?
ஏமனில் உள்ள ஹூதி இயக்கம், சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை அறிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர் 10-வது நாளாக நீடிப்பு: ஈரானின் ராணுவ மையங்கள் தகர்ப்பு
ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச வர்த்தக கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல்களை முடக்கும் நோக்கில், தொடர்ந்து 10-வது இரவாக ஈரான் மீது அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலின் வீடியோவை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ளது.
ஈரானில் வாழும் இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்: போர் உச்சக்கட்டத்தை எட்டியதால் இந்திய தூதரகம் அவசர அறிக்கை
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையேயான இராணுவ மோதல்கள் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள் தற்காலிகமாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு அவசர ஆலோசனையை வழங்கியுள்ளது.
'எனக்கு கவலையே இல்லை' - ஈரான் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் அதிரடி
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியிருந்த அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர் தீவிரம்: ஜோர்டானில் 2 அமெரிக்க வீரர்கள் பலி! மொஜ்தபா கமேனி பகீர் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் மோதல் தற்பொழுது ஒரு புதிய போராக வெடித்துள்ளது.
அமெரிக்கா ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்; மத்திய கிழக்கு முழுவதும் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த வாரம் எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் முற்றிலும் முறிந்துபோயுள்ளது.
வளைகுடா நாடுகளில் உள்ள டிரம்ப் பிராண்ட் ஹோட்டல்கள் மற்றும் கோல்ஃப் கிளப்கள் 'இலக்குகள்' என ஈரான் அறிவிப்பு
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே நிலவி வரும் இராணுவ மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வளைகுடா பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு சொந்தமான சொத்துக்களைத் தங்களின் இலக்குகளாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது.
6-வது நாளாக நீடிக்கும் அமெரிக்காவின் குண்டுமழை; ஈரானின் முக்கிய துறைமுகங்கள் காலி
ஈரான் மீதான தனது வான்வழித் தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது நாளாக தீவிரப்படுத்தியுள்ளது.
"அமெரிக்காவை ஏமாற்றப் பார்க்கிறார்கள்": இஸ்ரேல் அரசு மீது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் சாடல்
அமெரிக்க துணை அதிபரான ஜே.டி.வென்ஸ், அமெரிக்க பொதுமக்களை திசைதிருப்பி ஈரானுடனான போரை எல்லையற்று நீட்டிக்க இஸ்ரேல் அரசாங்கத்தின் "சில அமைப்புகள்" சதி செய்வதாக மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஈரான் போரால் அமெரிக்காவிற்கு $100 பில்லியன் நஷ்டம்? கசிந்த பெண்டகனின் ரகசிய ரிப்போர்ட்
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கான ஒட்டுமொத்த செலவு $80 பில்லியன் முதல் $100 பில்லியன் வரை (சுமார் ₹6.6 லட்சம் கோடி முதல் ₹8.3 லட்சம் கோடி) உயரக்கூடும் என்று அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகனின் ரகசிய உள்நாட்டு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஈரான் அறிவிப்பு
ஜூன் 17 அன்று அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அமைதிப் புரிந்துணர்வு ஒப்பந்தம் "செல்லாதது" எனக் கூறி, அதிலிருந்து விலகுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா மீண்டும் கடல்சார் முற்றுகை: 4வது நாளாக வான்வழித் தாக்குதல் தீவிரவடைந்தது
ஈரான் துறைமுகங்கள் மற்றும் அதன் கடற்கரை பகுதிகளுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களின் போக்குவரத்தை முடக்கும் வகையில், ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை அமெரிக்கா மீண்டும் அமல்படுத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
பஹ்ரைன் மீது ஈரான் ஏவுகணை வீச்சு; அமெரிக்காவின் '5-மணி நேர தாக்குதலுக்கு' பதிலடி கொடுத்த IRGC
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான ராணுவ மோதல் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்திக்கு 20% சுங்கக் கட்டணம்; அதிபர் டிரம்ப் திட்டத்தை கிண்டல் செய்த ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சர்வதேச சரக்குக் கப்பல்களுக்கு 20 சதவீதப் பாதுகாப்புக் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய அறிவிப்பை ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி சமூக வலைதளத்தில் கேலி செய்துள்ளார்.
ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் சேதம்; இந்திய மாலுமி பரிதாப பலி
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் படுகொலை செய்யப்பட்டால் என்ன நடக்கும்? உடனடியாக ஈரான் மீது போர் தொடுக்கப்படுமா? வான்ஸின் கையில் இருக்கும் அதிகாரம்
தன்னைத் தாக்குவதற்கோ அல்லது படுகொலை செய்வதற்கோ ஈரான் முயன்றால், அந்த நாடு இதுவரை பார்த்திராத அளவிற்கு ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ராணுவத்திற்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
ஈரானில் தரையிறங்கிய ரஷ்யாவின் 'Doomsday' சிறப்பு விமானம்; உலக நாடுகளை அதிரவைத்த மாஸ்கோவின் நகர்வு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் மிக முக்கிய மற்றும் பாதுகாக்கப்பட்ட போர் கட்டுப்பாட்டு விமானமான 'Tu-214PU' திடீரென ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் தரையிறங்கியுள்ளது.
வளைகுடா பகுதியில் நடத்திய எதிர் தாக்குதலில் அமெரிக்காவின் பேட்ரியாட் அமைப்புகளை அழித்ததாக கூறும் ஈரான்
வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள், வெடிமருந்துக் கிடங்குகள் மற்றும் ஆளில்லா விமான உள்கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக கூறி, ஈரான் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு பெரும் எதிர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது.
அமெரிக்க எம்பி லின்சே கிரஹாம் திடீர் மரணம்! ரஷ்யா, ஈரான் மீது கிளம்பும் சந்தேகங்கள்! மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
அமெரிக்காவின் குடியரசு கட்சியின் மூத்த செனட்டரான லின்சே கிரஹாம் (வயது 71), சனிக்கிழமை (ஜூலை 11) மாலை திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் காலமானார்.
அதிபர் டிரம்ப் உட்பட 13 உலகத் தலைவர்களை பழிவாங்க சபதம் எடுத்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி?
தனது தந்தை அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்க போவதாக ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சபதம் எடுத்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே வெடித்தது நேரடிப் போர்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஈரான் முயன்று வரும் சூழலில், அந்தப் பிராந்தியத்தில் உள்ள ஈரான் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்: சைப்ரஸ் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா மீண்டும் குண்டுமழை
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது.
"1,000 ஏவுகணைகள் தயார் நிலை": ஈரான் அதிபருக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை படுகொலை செய்ய ஈரான் நாடு முயன்றால், அதற்குப் பதிலடியாக அந்த நாட்டின் மீது ஒரே நேரத்தில் 1,000 ஏவுகணைகளை ஏவித் தாக்குவதற்கு அமெரிக்க ராணுவத்திற்கு முன்கூட்டியே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சனிக்கிழமையன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் மோதலில் இஸ்ரேலுக்கு 'நோ'! மோதல் கையை மீறிப் போவதை தவிர்க்க அமெரிக்கா திட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மாதம் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தையும் மீறி, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் நேரடி ராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.