Loading...
அமெரிக்கா - ஈரான் போர் 10-வது நாளாக நீடிப்பு: ஈரானின் ராணுவ மையங்கள் தகர்ப்பு
ஈரானின் ராணுவ மையங்களை குறி வைத்து தகர்த்த அமெரிக்கா படைகள்

அமெரிக்கா - ஈரான் போர் 10-வது நாளாக நீடிப்பு: ஈரானின் ராணுவ மையங்கள் தகர்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 21, 2026
09:47 am

செய்தி முன்னோட்டம்

ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச வர்த்தக கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல்களை முடக்கும் நோக்கில், தொடர்ந்து 10-வது இரவாக ஈரான் மீது அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலின் வீடியோவை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஈரானின் ராணுவக் கட்டுப்பாட்டு மையங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கடற்படை தளங்கள் ஆகியவை குறிவைத்து தகர்க்கப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

வீடியோ

CENTCOM அறிக்கை மற்றும் 'Thermal Imaging' வீடியோ

அமெரிக்கப் படைகள் தாக்கிய ஈரானிய ராணுவ இலக்குகளின் வெப்பப் பதிவு காட்சிகளைத் தன்னகத்தே கொண்ட வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது சென்ட்காம்.

"ஹார்முஸ் ஜலசந்தி வழியே வணிக கப்பல்கள் சுதந்திரமாக செல்வதை தடுக்கும் ஈரானின் ராணுவத் திறனைக் குறைப்பதற்காகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன".

"மே மாதத் தொடக்கத்தில் இருந்து இதுவரை சுமார் 900 வணிகக் கப்பல்களையும், 450 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயையும் பாதுகாப்பாக அமெரிக்கப் படைகள் வழிநடத்தியுள்ளன. சிவிலியன் மாலுமிகளுக்கு அச்சுறுத்தல் தரும எந்தவொரு நடவடிக்கைக்கும் ஈரான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்."

தொடர் தாக்குதல்

ஈரானில் தொடர் வெடிச்சத்தங்கள்

அமெரிக்காவின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, தெற்கு ஈரானின் ஹோரோஸ்ம்கான் மாகாணத்தில் உள்ள பெமானி மாவட்டத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக ஈரானிய அரசு ஊடகமான IRIB உறுதிப்படுத்தியுள்ளது.

ஹோரோஸ்ம்கான் மாகாணத்தின் முக்கியத் துறைமுக நகரான பண்டார் அப்ஸாஸ் மற்றும் கெஷ்ம் தீவு ஆகிய இடங்களில் பலமுறை குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் உச்சமடைந்துள்ள போதிலும், சர்வதேசத் தூதர்கள் மூலம் அமெரிக்காவுடனான மறைமுகப் பேச்சுவார்த்தைக்கான யோசனைகள் ஈரானுக்கு வந்தடைந்துள்ளதாக ஈரானிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்காலிக அமைதி ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும், ஈரானும் பரஸ்பரம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதுடன் உலகளாவிய கவலை அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT