Loading...
67 உயிர்களை பலிவாங்கிய கள்ளக்குறிச்சி கொடூரம்: சட்டசபையில் நீதிபதி கோகுல்தாஸ் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும்
நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கை, இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது

67 உயிர்களை பலிவாங்கிய கள்ளக்குறிச்சி கொடூரம்: சட்டசபையில் நீதிபதி கோகுல்தாஸ் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 08, 2026
11:26 am

செய்தி முன்னோட்டம்

கள்ளக்குறிச்சியில் 67 உயிர்களை பலிவாங்கிய கொடூர கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கை, இன்று தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சியின் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்து தயாரிக்கப்பட்ட நச்சுச் சாராயத்தை அருந்தியதால் இப்பெரும் விபத்து நேரிட்டது. இச்சம்பவத்தில் 67 பேர் உயிரிழந்த நிலையில், 145 பேர் மருத்துவ சிகிச்சைக்கு பின் காப்பாற்றப்பட்டனர். இச்சம்பவத்தின் பின்னணியைக் கண்டறியவும், மெத்தனால் விநியோக சங்கிலியை ஆராயவும், எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க பரிந்துரைகளை வழங்கிடவும் அப்போதைய அரசு நீதிபதி கோகுல்தாஸ் கமிஷனை அமைத்தது.

விசாரணை

சிபிஐ விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள்

முதலில் சிபி-சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, சென்னையைச் சேர்ந்த முக்கிய மெத்தனால் விநியோகஸ்தர் சிவகுமார் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

தாக்கல் செய்யப்படவுள்ள இந்த அறிக்கையில், கள்ளச்சாராயப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் மதுவிலக்குச் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீது கடுமையான துறைரீதியான விசாரணைகளைத் தொடங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மற்றும் கச்சிராயப்பாளையம் வட்டங்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் இப்பேரழிவிற்கு பொறுப்பானவர்கள் என நீதிபதி கோகுல்தாஸ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கியப் பரிந்துரைகள்

முக்கியப் பரிந்துரைகள் மற்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விவரங்கள்

கள்ளச்சாராய சம்பவத்தில் இருந்து, 2024-இல் கள்ளக்குறிச்சியில் இந்த சம்பவம் நிகழும் வரை பொறுப்பில் இருந்த துறை சார்ந்த அதிகாரிகள் மீது கடுமையான துறைரீதியான விசாரணையைத் தொடங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மற்றும் கச்சிராயப்பாளையம் வட்டங்களை சேர்ந்த VAO, வருவாய் ஆய்வாளர்கள்(RI) மற்றும் வட்டாட்சியர்கள் ஆகியோர் இக்கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பானவர்கள் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழில்துறைக்கு பயன்படுத்தப்படும் மெத்தனால் சட்டவிரோதமாக பிரித்தெடுக்கப்பட்டு கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு செல்வதைத் தடுக்க, மெத்தனால் இயக்கம், சேமிப்பு மற்றும் விநியோகத்தைக் கண்காணிக்கக் கடுமையான கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதச் சாராய நெட்வொர்க்குகளை முற்றிலுமாகக் கண்டறிந்து அழிக்க, காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் வருவாய்த்துறையினரின் கூட்டுக் கண்காணிப்பு முறைகளை விரிவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT