Loading...
ஏஐ கேமராக்கள் உங்களைப் பார்க்க முடியாது! மனிதர்களை மாயமாக்கும் விசித்திர டிஜிட்டல் சட்டை கண்டுபிடிப்பு
மனிதர்களை மாயமாக்கும் விசித்திர டிஜிட்டல் சட்டை கண்டுபிடிப்பு

ஏஐ கேமராக்கள் உங்களைப் பார்க்க முடியாது! மனிதர்களை மாயமாக்கும் விசித்திர டிஜிட்டல் சட்டை கண்டுபிடிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 07, 2026
11:27 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்களின் பார்வையில் மனிதர்கள் படுவதைத் தடுக்கும் பிரத்யேக டிஜிட்டல் கேமோஃப்ளேஜ் (Digital Camouflage) சட்டையை ஜெர்மனியை சேர்ந்த வடிவமைப்பாளர் சைமன் வேக்கர்ட் உருவாக்கியுள்ளார். பிரகாசமான பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற வடிவங்களுடன் கூடிய இந்த சட்டை, ஏஐ சிசிடிவி கேமராக்களின் மனித உருவத்தைக் கண்டறியும் அமைப்பைக் குழப்புகிறது. இந்த சட்டையை உடலுக்கு முன்பாக வைக்கும்போது கேமராவின் மனிதன் என்ற அடையாளக் குறியீடு உடனடியாக மறைந்துவிடுகிறது.

சட்டை

ஏஐ கேமராக்கள் இயங்கும் முறையும் சட்டையின் நுட்பமும்

மனிதர்களைப் போல இல்லாமல், ஏஐ கேமராக்கள் மில்லியன் கணக்கான படங்களின் வடிவங்கள், எல்லைகள், நிறங்கள் மற்றும் அமைப்புகளை வைத்தே ஒருவரைக் கண்டறிகின்றன.

இந்த டிஜிட்டல் சட்டை பிரகாசமான நிற மாற்றங்கள் மற்றும் ஒன்றோடொன்று மேலெழும் வடிவங்களைப் பயன்படுத்தி ஏஐ கேமராக்களுக்குக் கிடைக்கும் பார்வைக்கான சான்றுகளைக் குழப்புகிறது.

இதன் மூலம் கேமராவால் மனித உடலின் வெளிப்புற அமைப்பை சரியாக இணைக்க முடியாமல் போய், எதிரில் இருப்பது ஒரு மனிதன் என்பதை அடையாளம் காண முடியாமல் தோற்றுப்போகிறது.

ஏஐ தொழில்நுட்பம்

ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டே உருவாக்கப்பட்ட வடிவமைப்பு

இந்தச் சட்டையின் வடிவமைப்பை உருவாக்குவதற்குச் சைமன் வேக்கர்ட் ஏஐ தொழில்நுட்பத்தையே பயன்படுத்தியுள்ளார்.

"அட்வர்ஸரியல் லூப்" (Adversarial Loop) எனப்படும் முறையில், ஏஐ ஒரு வடிவத்தை உருவாக்கி அதனைப் பொருள் கண்டறியும் அமைப்புகளுக்கு எதிராக சோதனை செய்யும்.

கேமராவால் மனிதனைக் கண்டறிய முடியாத நிலை வரும் வரை அந்த வடிவம் மீண்டும் மீண்டும் மாற்றப்பட்டு சோதிக்கப்பட்டது.

ஓபன் சோர்ஸ் ஏஐ அமைப்பான YOLO என்ற நிகழ்நேரப் பொருள் கண்டறியும் தொழில்நுட்பத்திற்கு எதிராக இந்த சட்டை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கண்காணிப்பு அமைப்புகள் 

கண்காணிப்பு அமைப்புகளின் பலவீனத்தை வெளிப்படுத்தும் முயற்சி

பெர்லின் போன்ற பெரிய நகரங்களில் பொது இடங்களில் ஏஐ கண்காணிப்பு கேமராக்கள் அதிகரிக்க உள்ள நிலையில், அவற்றின் துல்லியத் தன்மையைச் சோதிக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சட்டை அனைத்து வகையான சிசிடிவி கேமராக்களையும் முற்றிலுமாக ஏமாற்றிவிடும் என்று தான் கூறவரவில்லை என வேக்கர்ட் தெளிவுபடுத்தியுள்ளார்.

மாறாக, தற்போதைய கம்யூட்டர் விஷன் தொழில்நுட்பத்தில் உள்ள மிகப்பெரிய பலவீனங்களையும் குறைபாடுகளையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ADVERTISEMENT