Loading...
அலிசா ஹீலியின் சாதனையைத் தகர்த்த ஷஃபாலி வர்மா! மிகக் குறைந்த வயதில் 3,000 ரன்கள் எடுத்து சாதனை
அலிசா ஹீலியின் சாதனையைத் தகர்த்த ஷஃபாலி வர்மா

அலிசா ஹீலியின் சாதனையைத் தகர்த்த ஷஃபாலி வர்மா! மிகக் குறைந்த வயதில் 3,000 ரன்கள் எடுத்து சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 06, 2026
10:34 am

செய்தி முன்னோட்டம்

மகளிருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராகக் களமிறங்கிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களைக் கடந்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக இந்த இலக்கை எட்டிய முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.

அலிசா ஹீலி

அலிசா ஹீலியின் வரலாற்று சாதனையைத் தகர்த்த இந்திய புயல்

இந்தப் போட்டிக்கு முன்பாக 3,000 ரன்களை எட்ட ஷஃபாலிக்கு 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

இந்திய கிரிக்கெட் அணியின் சேஸிங்கின் போது முதல் பந்திலேயே அவர் சிக்ஸர் அடித்தார்.

அடுத்த பந்திலேயே இந்த வரலாற்று இலக்கையும் எட்டிப் பிடித்தார்.

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெறும் 2,182 பந்துகளில் இந்த இலக்கை அவர் எட்டியுள்ளார்.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் முன்னணி வீராங்கனை அலிசா ஹீலி வைத்திருந்த அதிவேக உலக சாதனையை ஷஃபாலி முறியடித்துள்ளார்.

மகளிர் கிரிக்கெட்

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பிரத்யேக சாதனைப் பட்டியலில் இணைப்பு

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய தேசிய அணியில் ஷஃபாலி வர்மா அறிமுகமானார்.

வெறும் 7 ஆண்டுகளுக்குள் இந்த அரிய சாதனையை அவர் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

இந்திய மகளிர் அணியைப் பொறுத்தவரை இவர் மூன்றாவது வீராங்கனையாக இணைந்துள்ளார்.

முன்னதாக ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் 3,000 ரன்களைக் கடந்துள்ளனர்.

தற்பொழுது ஷஃபாலியும் இந்த வரிசையில் இணைந்து இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ADVERTISEMENT

பாகிஸ்தானை வீழ்த்தியது

பாகிஸ்தானைச் சுருட்டி அபார வெற்றி பெற்ற இந்திய அணி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மிரட்டினர்.

எதிரணியை வெறும் 55 ரன்களுக்குள் சுருட்டி இந்தியப் படை ஆதிக்கம் செலுத்தியது.

தொடர்ந்து 56 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களம் கண்டது.

இறுதியில் 8.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஆசியக் கோப்பைத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணித் தனது பயணத்தைத் தொடர்கிறது.

ADVERTISEMENT