Loading...
பாகிஸ்தான் அத்துமீறினால் வீட்டிற்குள் புகுந்து அடிப்போம்! SRCC நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு
SRCC நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு

பாகிஸ்தான் அத்துமீறினால் வீட்டிற்குள் புகுந்து அடிப்போம்! SRCC நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 06, 2026
09:10 am

செய்தி முன்னோட்டம்

டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஸ்ரீ ராம் வர்த்தகக் கல்லூரியின் (SRCC) நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். கல்விசார் சிறப்பு, நிறுவனக் கட்டமைப்பு மற்றும் வணிகம், பொதுவாழ்வில் பல தலைமுற தலைவர்களை உருவாக்கிய பெருமை இந்தக் கல்லூரிக்கு உண்டு என்று அவர் பாராட்டினார். இந்நாளில் இங்கு கூடியுள்ள பல்வேறு தலைமுறைகளை சேர்ந்த மாணவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

எச்சரிக்கை

பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான எச்சரிக்கை

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பயங்கரவாதத்தைப் பரப்புபவர்கள் இன்று பலவீனமடைந்து பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஏதேனும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், இந்திய ஆயுதப் படைகள் அவர்களின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் என்று அவர் எச்சரித்தார்.

ஜம்மு காஷ்மீர் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை அமைதி திரும்பியுள்ளதாகவும், மாவோயிஸ்ட் பயங்கரவாதம் மற்றும் நக்சலிசத்தின் முதுகெலும்பு ஒடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சி

7.8 சதவீத பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேச்சு

நாட்டின் 7.8 சதவீத காலாண்டு ஜிடிபி வளர்ச்சி இந்தியர்களின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மேற்கு ஆசியாவில் போர் மற்றும் உலகளாவிய வர்த்தகச் சவால்கள் நிலவும் இக்காலகட்டத்திலும் இத்தகைய அதிவேக வளர்ச்சியை அடைந்தது இந்தியாவின் வலிமையைக் காட்டுகிறது என்றார்.

கடந்த காலத்தில் இந்தியாவை பலவீனமான ஐந்து நாடுகளில் ஒன்றாக மாற்றியவர்களால், தற்போதைய இந்த பொருளாதார வளர்ச்சி புள்ளிவிவரங்களை செரித்துக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் சாடினார்.

ADVERTISEMENT

முன்னேற்றம்

2013 உரையின் நினைவுகள் மற்றும் முன்னேற்றம்

கடந்த 2013 ஆம் ஆண்டு இதே கல்லூரியில் தான் ஆற்றிய உரை பெரும் மாற்றத்திற்கான அலையை உருவாக்கியதாகப் பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.

அப்போது எதிர்க்கட்சியில் இருந்தபோதிலும் அரசை விமர்சிக்காமல் நேர்மறையான தொலைநோக்குப் பார்வையையே முன்வைத்ததாக அவர் கூறினார்.

அன்றைய சூழலில் கொள்கை முடக்கத்தில் இருந்த இந்தியா, இன்று கொள்கை ஆற்றல்மிக்க நாடாகவும், உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மையமாகவும் உலகளவில் உருவெடுத்துள்ளது என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ADVERTISEMENT