GTA 6 ரிலீஸ் எதிரொலி: கேம் விளையாடுவதற்காக அலுவலகங்களுக்கு லீவ் எடுப்பதில் இந்தியர்கள் முதலிடம்
செய்தி முன்னோட்டம்
13 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ள 'கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ - 6' (GTA 6) வீடியோ கேமை விளையாடுவதற்காக, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கேமிங் ஆர்வலர்கள் அலுவலகங்களுக்கு லீவ் எடுத்துள்ளனர். இதில் இந்தியர்களே முதலிடத்தில் இருப்பதாக HR புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்தியாவில், வார இறுதி நாட்களுடன் சேர்த்து தொடர்ந்து 4 நாட்கள் விளையாடுவதற்காக பலர் விடுப்பு கோரியுள்ளனர். உலகளாவிய மனிதவளத் துறை தரவுகளின்படி, கேம் வெளியாகும் தேதியை ஒட்டி வருடாந்திர விடுப்பு எடுப்பது சராசரியாக 32% அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் இந்த எண்ணிக்கை 60% வரை உயர்ந்துள்ளது.
சாதனை
ஊழியர்களுக்கு 'வைஸ் சிட்டி' விடுப்பு அளித்த ஜப்பான் நிறுவனம்
பிரிட்டனில் தேனிலவு மற்றும் பட்டமளிப்பு விழாக்களுக்காக எடுக்கப்படும் விடுப்புகளை விட அதிகமாக, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 83,000-க்கும் அதிகமான விடுப்பு நாட்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் விடுப்பு எடுப்பதைத் தாண்டி, சில நிறுவனங்களே GTA 6 வெளியீட்டை உற்சாகத்துடன் ஆதரித்து வருகின்றன.
ஜப்பானை சேர்ந்த பிரபல கேமிங் நிறுவனமான Pocketpair ஸ்டுடியோ, தனது ஊழியர்களுக்கு "Business trip to Vice City" எனக் குறிப்பிட்டு சிறப்பு விடுப்பு வழங்கியுள்ளது. GTA 6 கேமின் கதைக்களம் 'வைஸ் சிட்டி' என்ற கற்பனை நகரத்தை மையமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
GTA 6, வெளியான முதல் நாளிலேயே பொழுதுபோக்குத் துறையில் புதிய வரலாறு படைத்து வருகிறது.