அமெரிக்க எம்பி லின்சே கிரஹாம் திடீர் மரணம்! ரஷ்யா, ஈரான் மீது கிளம்பும் சந்தேகங்கள்! மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் குடியரசு கட்சியின் மூத்த செனட்டரான லின்சே கிரஹாம் (வயது 71), சனிக்கிழமை (ஜூலை 11) மாலை திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் காலமானார். உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குச் சென்று அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து விட்டுத் திரும்பிய இரண்டு நாட்களிலேயே இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல தலைவர்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், இவரது திடீர் மரணம் அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா மற்றும் ஈரான்
இணையத்தில் பரவும் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான வதந்திகள்
லின்சே கிரஹாம் மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கோரினார். மேலும் அவர் உக்ரைனில் பார்வையிட்ட ஒரு ட்ரோன் தொழிற்சாலை அடுத்த நாளே ரஷ்யாவால் குண்டுவீசி அழிக்கப்பட்டது. அதேபோல், ஐந்து நாட்களுக்கு முன்புதான் ஈரானின் ஐஆர்ஜிசி அமைப்பு இவரை கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தது. இந்தத் தொடர் நிகழ்வுகளால், அவர் ரஷ்யா அல்லது ஈரானிய உளவு அமைப்புகளால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற வதந்திகள் டிரம்பின் ஆதரவாளர்கள் மத்தியில் பரவி வருகின்றன.
பிரேத பரிசோதனை
மருத்துவ பரிசோதனையில் வெளியான இறப்பிற்கான காரணம்
சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தாலும், அமெரிக்கப் பாதுகாப்புத் துறையோ அல்லது அதிகாரிகளோ இதில் எந்தவொரு சதி வேலையும் இருப்பதாகக் குறிப்பிடவில்லை. வாஷிங்டன் மருத்துவ அதிகாரி நடத்திய முதற்கட்டப் பரிசோதனையில், லின்சே கிரஹாமின் மரணத்திற்கு அயோர்டிக் டிஸெக்ஷன் என்ற இதய பாதிப்பே காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் முக்கிய தமனியில் ஏற்படும் கிழிசல் ஆகும்.
இதய நோய் பின்னணி
இதய நோய் பின்னணியும் மருத்துவ அதிகாரிகளின் விளக்கமும்
லின்சே கிரஹாமிற்கு ஏற்கனவே தமனிகள் தடிமனாகும் ஆர்டிரியோஸ்க்ளெரோடிக் கார்டியோவாஸ்குலர் நோய் பாதிப்பு இருந்துள்ளது. மேலும், இவரது குடும்பத்தில் இவரது தந்தையும் 69 வயதில் மாரடைப்பால் காலமான வரலாற்றுப் பின்னணி உள்ளது. சனிக்கிழமை இரவு இவரது வீட்டில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, மருத்துவக் குழுவினர் இவரைக் காப்பாற்ற முயன்றும் அது பலனளிக்கவில்லை என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.