Loading...
அமைதிக்கு இடையே ஈரானின் திடீர் ஏவுகணைத் தாக்குதல்; பதிலடி கொடுத்த அமெரிக்கா - சவூதி கூட்டணி
அமெரிக்க ராணுவ முகாமை குறிவைத்து ஈரான் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது

அமைதிக்கு இடையே ஈரானின் திடீர் ஏவுகணைத் தாக்குதல்; பதிலடி கொடுத்த அமெரிக்கா - சவூதி கூட்டணி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 29, 2026
07:13 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில், ஈரானின் திடீர் ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் சவூதி அரேபிய படைகள் ஈராக்கில் கூட்டுத் தாக்குதலை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாமை குறிவைத்து ஈரான் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) இதனை ஒரு "திடீர் தாக்குதல் முயற்சி" எனக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இந்த ஏவுகணைகள் அனைத்தும் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பதிலடி

அமெரிக்கா - சவூதி படைகளின் கூட்டு பதிலடி

ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, ஈராக்கின் கிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளின் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

கடந்த 72 மணி நேரத்தில் சவூதியின் எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் அமெரிக்க படைகள் மீது நடத்தப்பட்ட 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சென்ட்காம் அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தைக்காகத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த நிலையில் இந்த மோதல் வெடித்துள்ளது.

"பேச்சுவார்த்தை விரைவாக நடைபெற வேண்டும்; இல்லையெனில் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்" என டிரம்ப் எச்சரித்த சில மணி நேரங்களிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT