விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்
அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; கே.எல்.ராகுல் புதிய சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இடம்பெறுவது உறுதி எனத் தகவல்
மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில், இருவரும் அக்டோபர் 19 முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
INDvsWI முதல் டெஸ்ட்: முதல் டெஸ்ட் சதத்தை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த துருவ் ஜூரேல்
இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரேல், அகமதாபாத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில் அடித்த தனது முதல் டெஸ்ட் சதத்தை இந்திய ராணுவம் மற்றும் கார்கில் போர் வீரரான தனது தந்தைக்கு அர்ப்பணித்தார்.
உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு வெள்ளிப் பதக்கம்!
இந்தியாவின் நட்சத்திர பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, நார்வேயின் ஃபோர்டேயில் நடைபெற்ற 2025 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று மீண்டும் முத்திரை பதித்துள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கைகுலுக்காத கொள்கையை தொடருமா?
2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணி அனைத்து கிரிக்கெட் நெறிமுறைகளையும் கடைப்பிடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
ஏலத்தில் தேர்வாகவில்லை, ஆனாலும் வரவிருக்கும் ILT20 இல் அஸ்வின் ரவிச்சந்திரன் இடம்பெற முடியுமா?
அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்ற 2025-26 சீசனுக்கான தொடக்க சர்வதேச லீக் டி20 (ILT20) ஏலத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் விற்கப்படாமல் போனார்.
இந்திய அணி வந்து ஆசிய கோப்பையை பெற்றுக்கொள்ளலாம்: ACC தலைவர் மொஹ்சின் நக்வி
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி, 2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க முன்வந்துள்ளார்.
ஆசிய கோப்பை கோப்பையை வழங்க ACC தலைவர் மொஹ்சின் நக்வி மறுப்பு, ஆனால்...
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலை மேற்பார்வையிடும் PCB தலைவர் மொஹ்சின் நக்வி, ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
RCBக்கு புதிய உரிமையாளர்களா? சமூக ஊடகங்களில் ஹிண்ட் கொடுத்த லலித் மோடி
2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) விற்பனைக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிய கோப்பையை மறுப்பதற்கு முன் ஒரு மணி நேரம் காக்கவைக்கப்பட்ட இந்திய அணி
துபாயில் நடைபெற்ற 2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பையின் சர்ச்சைக்குரிய முடிவு குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இறுதியாக மௌனத்தைக் கலைத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு; 14 ஆண்டுகால வாழ்க்கைக்கு விடை கொடுத்த கிறிஸ் வோக்ஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரரான கிறிஸ் வோக்ஸ், தனது 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை முடிந்த ஒரே வாரத்தில் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தித் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுக் கிரிக்கெட் போட்டி மீண்டும் நடைபெற உள்ளது.
'போரே பெருமை என்றால்...' பிரதமர் மோடியின் கருத்துக்கு பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி பதில்
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மொஹ்சின் நக்வி பதில் கொடுத்துள்ளார்.
ஆசிய கோப்பை சாம்பியன் இந்திய அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசுத்தொகை!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொஹ்சின் நக்வி கோப்பை கொடுக்கலான என்ன! போட்டோஷாப் கோப்பையுடன் புகைப்படங்களை பதிவிட்ட இந்திய வீரர்கள்
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்றபோது, பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவரான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்க இந்திய வீரர்கள் மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசிய கோப்பை ஊதியத்தை இந்திய ராணுவ வீரர்களுக்கும் பஹல்காம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழகுவதாக சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு
டி20 வடிவ இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆசிய கோப்பைத் தொடரில் தான் விளையாடிய போட்டிகளுக்கான மொத்த ஊதியத்தையும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
asia cup:வெற்றி கோப்பையை ஏற்க மறுத்த இந்தியா, தப்பி ஓடிய பாகிஸ்தான் அமைச்சர்
2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பில் இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
டி20 ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: திலக் வர்மா இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் பதிவு
துபாயில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக முன்னாள் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வீரரான ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மிதுன் மன்ஹாஸ் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டோஷூட்டை நிராகரித்தார் சூர்யகுமார் யாதவ்
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்தியா vs பாகிஸ்தான் அணிகளின் கேப்டன்கள் கலந்துகொள்ளவிருந்த பாரம்பரியப் போட்டோஷூட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கலந்துகொள்ள மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025: ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் விவரங்களை வெளியிட்டது ஐசிசி
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடருக்கான ஒளிபரப்பு மற்றும் நேரடி ஸ்ட்ரீமிங் கூட்டாளர்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.
தந்தையை இழந்த இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவுக்காக சூர்யகுமார் யாதவ் செய்த உருக்கமான செயல்
நடந்துவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், இளம் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவுக்கு மிகவும் கடினமான காலமாக அமைந்துள்ளது.
டி20 வடிவ ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் வரலாற்றுச் சாதனை
இலங்கைக்கு எதிரான பரபரப்பான சூப்பர் ஃபோர் ஆட்டத்தைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், டி20 ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்து சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
பிசிசிஐ மேல்முறையீடு: சூர்யகுமார் யாதவ் மீதான ஐசிசி அபராதத்தை எதிர்த்து நடவடிக்கை
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி விதித்த 30% போட்டி ஊதிய அபராதத்தை எதிர்த்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மேல்முறையீடு செய்துள்ளது.
சூர்யகுமார் யாதவுக்கு போட்டி ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவு
இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு பேசியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அவருடைய போட்டி ஊதியத்தில் 30% அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
வரலாற்றுச் சாதனை: 400 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து ஏ டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி
லக்னோவில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா ஏ அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
துப்பாக்கி சைகைக்கும் அதற்கும் தொடர்பில்லை; பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஐசிசியிடம் விளக்கம்
ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியின்போது தான் செய்த கொண்டாட்டம், அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று நடைபெற்ற ஐசிசி விசாரணையில் விளக்கம் அளித்தார்.
ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தத்தால் ஐபிஎல் டிக்கெட் விலை உயர்வு; ரசிகர்கள் வருகை மற்றும் வருவாய் குறையும் அபாயம்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதால், இந்தியன் பிரீமியர் லீக் (ஜிஎஸ்டிஐபிஎல்) போட்டிகளின் டிக்கெட் விலைகள் உயரவுள்ளன.
ஐசிசி விசாரணையில் சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன? விவரங்கள்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) விசாரணையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 'தான் குற்றவாளி அல்ல' என்று தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை: இன்று இந்தியா - இலங்கை மோதல்; இறுதிப் போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில், இன்று இரவு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் துபாயில் மோதுகின்றன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புகார் குறித்து சூர்யகுமார் யாதவ் ஐசிசி விசாரணையில் ஆஜராகி விளக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் முன் வியாழன் (செப்டம்பர் 25) அன்று நடைபெற்ற விசாரணையில் பங்கேற்றார்.
ரிஷப் பண்ட் இந்திய அணிக்குத் திரும்புவது எப்போது? தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் சொன்னது இதுதான்
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், காயம் காரணமாக தொடர்ந்து அணியில் இடம்பெறாத நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் களமிறங்குவார் என்று இந்தியத் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு; மூன்று தமிழக வீரர்களுக்கு இடம்
வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக பிசிசிஐ ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஐசிசிக்கு புகார்
துபாயில் நடந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டிக்குப் பிறகு, இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான பதட்டங்கள் களத்தை விட்டு புதிய பரிமாணம் எடுத்துள்ளன.
சிவப்பு பந்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு கோருகிறார் ஷ்ரேயாஸ் ஐயர்: விவரங்கள்
ஒரு பெரிய முன்னேற்றத்தில், இந்திய பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியான முதுகு விறைப்பு மற்றும் சோர்வு காரணமாக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு கோரியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலியா ஏ போட்டியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது நான்கு நாள் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இந்தியா ஏ அணியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார் மற்றும் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி உள்ளிட்ட நான்கு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கியது தமிழக அரசு
தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான 3% இடஒதுக்கீட்டின் கீழ், நான்கு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
ஆசியா கப் சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தானுக்கு எதிராக ஷுப்மன் கில், அபிஷேக் கூட்டணி சாதனை
வரலாற்றுச் சாதனையாக, பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் எடுத்த இந்தியாவின் தொடக்க ஜோடி என்ற புதிய சாதனையை ஷுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா படைத்துள்ளனர்.
Asia cup 2025: இந்திய அணி அபார வெற்றி; சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தியது!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான சூப்பர் 4 சுற்றில், இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.