
செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி உள்ளிட்ட நான்கு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கியது தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான 3% இடஒதுக்கீட்டின் கீழ், நான்கு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) இந்த ஆணைகளை வழங்கினார். சர்வதேச செஸ் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீராங்கனை வைஷாலி, மகளிர் கால்பந்து போட்டிகளில் சாதனை படைத்து வரும் சுமித்ரா, கூடைப்பந்து போட்டியில் பதக்கங்களை வென்று வரும் சத்யா, மற்றும் பாய்மரப் படகு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி வரும் சித்ரேஷ் ஆகியோருக்கு இந்த அரசுப் பணி வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இந்த நான்கு வீரர்களும் தங்கள் விளையாட்டுத் திறமைக்காக அங்கீகரிக்கப்பட்டு, அரசுப் பணியில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையருக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
— Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) September 22, 2025
அந்த வகையில், நம் முதலமைச்சர் @mkstalin அவர்கள்,
♟️செஸ் போட்டிகளில் சர்வதேச அளவில் சாதனைப்படைத்து வரும் தங்கை வைஷாலி,
⚽️மகளிர்… pic.twitter.com/WnOqSsEY3T