LOADING...
டி20 வடிவ ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் வரலாற்றுச் சாதனை
ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் சாதனை

டி20 வடிவ ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் வரலாற்றுச் சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 27, 2025
07:48 am

செய்தி முன்னோட்டம்

இலங்கைக்கு எதிரான பரபரப்பான சூப்பர் ஃபோர் ஆட்டத்தைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், டி20 ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்து சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் தொடர் முழுவதும் சிறப்பான ஃபார்மில் இருக்கும் 30 வயதான இந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர், முந்தைய சாதனையை முறியடிக்க ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) நடைபெற்ற இலங்கைக்கு எதிராக போட்டியில் ஒரு முக்கியமான விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம், டி20 ஆசியக் கோப்பை வடிவத்தில் 13 விக்கெட்டுகளை எட்டினார்.

முறியடிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரரின் சாதனை முறியடிப்பு

முன்னதாக, ஆசிய கோப்பையின் டி20 கிரிக்கெட் வடிவத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அம்ஜத் ஜாவேத் 12 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், குல்தீப் யாதவ் தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளார். இந்தச் சாதனை, இரு அணிகளும் 202 ரன்கள் எடுத்து, பரபரப்பான சூப்பர் ஓவர் டை பிரேக்கருக்கு வழிவகுத்த ஒரு முக்கியமான சூப்பர் ஃபோர் போட்டியின்போது நிகழ்ந்தது. சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றியைக் கைப்பற்றி, பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டிக்குச் செல்லும் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது. அவரது இந்தச் சாதனை, ஆசிய கோப்பையை வெல்லத் தயாராகும் இந்திய அணிக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது. இந்தியா அடுத்து ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.