
Asia cup 2025: இந்திய அணி அபார வெற்றி; சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தியது!
செய்தி முன்னோட்டம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான சூப்பர் 4 சுற்றில், இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கடந்த ஏழு நாட்களில் பாகிஸ்தானை இந்திய அணி இரண்டாவது முறையாக வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, தொடக்க வீரர் சாஹிப்ஜாதா ஃபர்ஹானின் அதிரடி அரை சதம் (58 ரன்கள்) உதவியுடன் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. ஃபகார் ஜமான்(15), சயீம் அயூப்(21), முகமது நவாஸ்(21), சல்மான் அலி அகா(17) மற்றும் ஃபஹீம் அஷ்ரஃப் (20) ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.
சேசிங்
இந்தியாவின் வெற்றிகரமான சேசிங்
172 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்க வீரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரின் வலுவான பார்ட்னர்ஷிப் மூலம் சிறப்பாகத் தொடங்கியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு நூறு ரன்களுக்கு மேல் சேர்த்து வெற்றிக்கு வலுவான அடித்தளமிட்டனர். அபிஷேக் ஷர்மா 74 ரன்களும், ஷுப்மன் கில் 47 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில், சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தாலும், திலக் வர்மா(30), சஞ்சு சாம்சன்(13) மற்றும் ஹர்திக் பாண்டியா(7) ஆகியோர் நிதானமாக ஆடி, 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.