விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
ஆசிய கோப்பை 2025: INDvsPAK சூப்பர் 4 டாஸ் நிகழ்வில் சல்மான் ஆகாவை கண்டுகொள்ளாத சூர்யகுமார் யாதவ்
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டிக்கு முன்னதாக, டாஸ் போடும் நிகழ்வின்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவை கண்டுகொள்ளாமல் தவிர்த்தார்.
ஆசிய கோப்பை 2025: INDvsPAK சூப்பர் 4 சுற்று போட்டியில் டாஸ் வென்றது இந்தியா; பாகிஸ்தான் முதலில் பேட்டிங்
ஆசிய கோப்பை 2025 இல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
அவர்கள் யாருமே கிடையாதாம்; முன்னாள் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் பிசிசிஐ தலைவராக வாய்ப்பு
முன்னாள் டெல்லி கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதம்; விராட் கோலியின் 12 வருட சாதனையை முறியடித்தார் ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் (ODI) அதிவேக சதம் அடித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்தார் பாகிஸ்தான் கேப்டன்
ஆசிய கோப்பை 2025 இல் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அகா மீண்டும் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்த்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025: சூப்பர் 4 சுற்று ஆட்டத்திலும் பாகிஸ்தானுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மாட்டார்களா? சூர்யகுமார் யாதவ் விளக்கம்
ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வரும் நிலையில், அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.
டி20 சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்தியர்; அர்ஷ்தீப் சிங் சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், டி20 சர்வதேசப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025: சூப்பர் ஃபோர் அட்டவணை, இடங்கள், நேரங்கள் மற்றும் விவரங்கள்
2025 ஆசியக் கோப்பையின் சூப்பர் ஃபோர் நிலை சனிக்கிழமை இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்கும்.
உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஏமாற்றம்; சச்சின் யாதவ் அசத்தல்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா ஏமாற்றமளிக்கும் வகையில் எட்டாவது இடத்தைப் பிடித்தார்.
இந்தியாவை தொடர்ந்து, ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 இல் நுழைந்தது பாகிஸ்தான்: அடுத்த மோதல் எப்போது?
2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பையின் இறுதி குரூப் நிலை ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார் வருண் சக்ரவர்த்தி: விவரங்கள்
இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி சமீபத்திய ஐ.சி.சி ஆண்கள் டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்ததன் மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமையை அப்பல்லோ டயர்ஸ் வென்றது
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமையை 2027 வரை அப்பல்லோ டயர்ஸ் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்காமல் இருந்ததற்காக இந்தியா தண்டிக்கப்பட முடியுமா?
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சமீபத்திய ஆசியக் கோப்பை வெற்றி சர்ச்சைகளால் சூழப்பட்டுள்ளது.
உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்: உலக சாம்பியன் ஆனார் சென்னை வீரர் ஆனந்த்குமார்
சீனாவில் நடைபெற்ற 2025 உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் ஆனந்த்குமார் வேல்குமார் ஆண்கள் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
WPL 2026 ஜனவரியில் தொடங்க உள்ளது: விவரங்கள் இங்கே
கிரிக்பஸின் அறிக்கையின்படி, 2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL) சீசன் ஜனவரி தொடக்கத்தில், முந்தைய பதிப்புகளை விட மிகவும் முன்னதாகவே தொடங்க உள்ளது.
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்காதது சரிதான்; சூர்யகுமார் யாதவிற்கு சவுரவ் கங்குலி ஆதரவு
ஆசிய கோப்பை 2025 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கிராண்ட் சுவிஸ் பட்டத்தை வென்று கேண்டிடேட்ஸ் 2026 க்குத் தகுதி பெற்றார் ஆர்.வைஷாலி
இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர்.வைஷாலி, சாமர்கண்டில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் தனது பட்டத்தைப் பாதுகாத்து, ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் 2026 போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
'கைகுலுக்காம போய்ட்டாங்க'; ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய அணி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்
ஆசிய கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான தோல்விக்குப் பின்னர், இந்திய வீரர்கள் தங்களுடன் கைகுலுக்க மறுத்ததாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
Asia Cup: இந்தியாவின் வெற்றியை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பித்த SKY
துபாயில் நடந்த சர்ச்சைக்குரிய ஆசிய கோப்பை போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் இந்தியாவை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.
மினிமேக்ஸ் கார்ட் பந்தயத்தில் சாம்பியன் பட்டம்; 10 வயது இந்திய கார் பந்தைய வீராங்கனை அத்திகா மிர் உலக சாதனை
இந்தியாவைச் சேர்ந்த 10 வயது இளம் கார் பந்தய வீராங்கனை அத்திகா மிர், யுஏஇ கார்ட் பந்தயத்தின் மினிமேக்ஸ் பிரிவில் கோப்பையை வென்ற முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025 INDvsPAK: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்தியா முதலில் பந்துவீச்சு
இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை 2025 குழு நிலை ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறுகிறது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனையை விஞ்சி ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மகளிர் ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்தின் ஏமி சாட்டர்வெய்ட்டை முந்தி, ஏழாவது அதிக ரன்களைக் குவித்த வீராங்கனையாக புதிய சாதனை படைத்துள்ளார்.
பிசிசிஐ தலைவர் பதவிக்கு ஹர்பஜன் சிங் நியமனமா? பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் முன்மொழிவு என தகவல்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புரோ கபடி லீக்: ஒழுங்கீனக் காரணங்களுக்காக தமிழ் தலைவாஸ் அணியிலிருந்து கேப்டன் பவன் செஹராவத் வெளியேற்றம்
புரோ கபடி லீக் தொடரின் நடுவே, தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனும், இந்திய கபடி அணியின் தற்போதைய கேப்டனுமான பவன் செஹராவத், ஒழுங்கீனக் காரணங்களுக்காக வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் ஜாஸ்மின் லம்போரியா
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 2025 உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஈஷா சிங் தங்கம் வென்றார்
சீனாவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய விளையாட்டு வீராங்கனை ஈஷா சிங், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள்; இந்தியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
நேபாளப் போராட்டத்தில் மாட்டிக் கொண்ட இந்திய வாலிபால் குழுவினர் பத்திரமாக மீட்பு
நேபாளத்தில் நடந்து வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் சிக்கித் தவித்த இந்திய வாலிபால் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் குழு, இந்தியத் தூதரகத்தால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார், தேர்தல் இல்லை: அருண் துமல்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தலைவர் அருண் துமல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதன் புதிய தலைவரை "ஒருமனதாக" நியமிக்கும் என்று கூறியுள்ளார்.
பிசிசிஐ தலைவர் பதவிக்கான போட்டியில் சச்சின் டெண்டுகள் இருக்கிறாரா? உண்மை இதுதான்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்குத் தான் பரிசீலிக்கப்படுவதாகப் பரவி வரும் வதந்திகளை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
உச்ச நீதிமன்றம், ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க வியாழக்கிழமை (செப்டம்பர் 11) மறுத்துவிட்டது.
ஆசிய கோப்பை 2025: சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவ் அடுத்த போட்டியில் சேர்க்கப்பட மாட்டாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியத் தேர்வுக்குழுவின் கொள்கையை நகைச்சுவையாக விமர்சித்துள்ளார்.
ராகுல் ட்ராவிடை தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகுகிறார் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் லஷ் மெக்ரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி, தலைமைத்துவ மாற்றங்களால் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது.
மருத்துவமனைக்கு சென்ற ரோஹித் சர்மா; ரசிகர்கள் கவலை
இந்திய அணியின் தற்போதைய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேற்று இரவு மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் காணப்பட்டார்.
ஆசிய கோப்பை: கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பைக்கான தகுதியைப் பெற்றது இந்தியா
செப்டம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை ராஜ்கிரில் நடந்த இறுதிப் போட்டியில் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி, ஆசியக் கோப்பை பட்டத்திற்கான 8 ஆண்டுகால காத்திருப்புக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவர் காம்பவுண்ட் அணி முதன் முறையாக தங்கம் வென்று சாதனை
இந்திய ஆடவர் காம்பவுண்ட் அணி, உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்பு; ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு ஃபேர்வெல்?
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்த எந்த டி20யிலும் இந்திய அணி தோற்றதில்லை; ஆசிய கோப்பையில் வாய்ப்புக் கிடைக்குமா?
செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பைத் தொடரில், விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
யுஎஸ் ஓபனில் இரண்டாவது முறை; செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு வரலாற்று வெற்றி பெற்ற ஆர்யனா சபலெங்கா
ஆர்யனா சபலெங்கா, யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டார்.
டென்னிஸில் புதிய சகாப்தம்: 23 ஆண்டுகளில் ஜாம்பவான்கள் இறுதிப்போட்டியில் பங்கேற்காத முதல் காலண்டர் கிராண்ட்ஸ்லாம்
டென்னிஸ் உலகின் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள ஜானிக் சின்னர் மற்றும் கார்லோஸ் அல்கராஸ் இடையே புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.