
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்பு; ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு ஃபேர்வெல்?
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2027 ஒருநாள் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, அவருக்குத் தலைமைப் பொறுப்பில் நிலைபெறப் போதுமான அவகாசத்தை வழங்க பிசிசிஐ தேர்வுக்குழு ஆர்வமாக உள்ளது. ரோஹித் ஷர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையே இப்படி கருதப்படுவதற்குக் காரணமாகும். வரவிருக்கும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர், ரோஹித்தின் கடைசித் தொடராக இருக்கலாம் எனப் பார்க்கப்படுகிறது. ரோஹித் தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும், அடுத்த உலகக் கோப்பையில் அணியைத் தலைமை தாங்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இறுதி முடிவு தேர்வுக்குழுவினரின் கைகளில் உள்ளது.
ஷுப்மன் கில்
ஷுப்மன் கில்லுக்கு பொறுப்பு வழங்குவது உறுதி
ஷுப்மன் கில்லுக்குப் தலைமைப் பொறுப்பை வழங்குவது உறுதியான ஒன்று என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த மாற்றம், இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவங்களுக்கும் ஒரே கேப்டன் என்ற திட்டத்திற்கு வழிவகுக்கும். ஷுப்மன் கில் ஏற்கனவே டெஸ்ட் அணியை வழிநடத்தி வருகிறார். தற்போது டி20 அணியின் துணை கேப்டனாகவும் உள்ளார். 2026 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு சூர்யகுமார் யாதவிடம் இருந்து டி20 கேப்டன் பொறுப்பையும் அவர் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.