03 Aug 2025
80 வயதில் ப்ளூ ஆரிஜினின் NS-34 மிஷனில் விண்வெளிக்கு பயணம் செய்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர்
இந்தியாவின் ஆக்ராவில் பிறந்த 80 வயதான ரியல் எஸ்டேட் முதலீட்டாளரும் சாகசக்காரருமான அர்விந்தர் 'அர்வி' சிங் பஹால், ப்ளூ ஆரிஜினின் NS-34 மிஷனில் விண்வெளியில் இறங்குவதன் மூலம் ஒரு வரலாற்று தனிப்பட்ட சாதனையை படைத்துள்ளார்.
பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவிகளுக்கான இரண்டாவது ஷோரூமை சென்னையில் திறந்தது டெஸ்லாவின் போட்டி நிறுவனமான வின்ஃபாஸ்ட்
வியட்நாமிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் இந்தியாவில் தனது இரண்டாவது ஷோரூமை சென்னையில் தொடங்கியுள்ளது.
141 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; இந்தியா vs இங்கிலாந்து தொடர் புதிய சாதனை
இந்தியா vs இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 141 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய வரலாறு படைத்துள்ளது.
தமிழகத்தில் 6.5 லட்சம் வாக்காளர்கள் தொடர்பான ப.சிதம்பரத்தின் கருத்தை நிராகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் 6.5 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் சமீபத்திய கூற்றை இந்திய தேர்தல் ஆணையம் உறுதியாக மறுத்துள்ளது.
நடிகர் மதன் பாப் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம்
பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல், உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) காலமான நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் உள்ள பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சந்தைப் பங்கை மீட்டெடுக்க செப்டம்பர் முதல் மீண்டும் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்த OPEC+ நாடுகள் திட்டம்
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC) மற்றும் அதன் கூட்டாளிகள் செப்டம்பர் மாதம் தொடங்கி எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 548,000 பீப்பாய்கள் அதிகரிக்க கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
உலக தாய்ப்பால் வாரம் 2025: பாலூட்டுதலின் முக்கியத்துவம் மற்றும் இயற்கையாக தாய்ப்பாலை அதிகரிக்க வைக்கும் உணவுகள்
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை அனுசரிக்கப்படும் உலக தாய்ப்பால் வாரம், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் தாய்ப்பால் கொடுப்பதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்குத் தடை; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் இடையே ரத்து செய்யப்பட்ட போட்டியைக் கையாள்வதில் போட்டி ஏற்பாட்டாளர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டி, எதிர்கால உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கம்; 600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடிக்கத் தொடங்கி உள்ள ரஷ்ய எரிமலை
ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பம் ஆறு நூற்றாண்டுகளில் முதல் முறையாக க்ராஷென்னினிகோவ் எரிமலை வெடித்ததால் ஒரு அரிய புவியியல் நிகழ்வை சந்தித்துள்ளது.
இன்னும் ஐந்து ஆண்டுகள் ஐபிஎல்லில் விளையாடுவதாக சொன்ன எம்எஸ் தோனி? முழு விபரம்
எம்எஸ் தோனி மீண்டும் ஒருமுறை ரசிகர்களை தனது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எதிர்காலம் குறித்து ஊகிக்க வைத்துள்ளார், இது அவரது ஓய்வுத் திட்டங்கள் குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வரும் நாட்களில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில், தீவிர மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கௌரவிப்பு
குறிப்பிடத்தக்க தேசிய அங்கீகாரமாக, உறுப்பு தானம் மற்றும் மாற்று திட்டங்களில் சிறப்பான செயல்திறனுக்காக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு விருது பெற்றுள்ளது.
கூகுள் தேடலில் வெளியான சாட்ஜிபிடி உரையாடல்கள்; தனியுரிமை கவலைகள் காரணமாக அம்சத்தை நீக்கியது ஓபன்ஏஐ
தனிப்பட்ட உரையாடல்களைப் பகிரங்கப்படுத்தும் சாட்ஜிபிடி அம்சத்தை ஓபன்ஏஐ நீக்கியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கோண்டாவில் கால்வாயில் எஸ்யூவி கவிழ்ந்து பதினொரு பக்தர்கள் பலி
உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) அன்று பக்தர்களை ஏற்றிச் சென்ற எஸ்யூவி வாகனம் சாலையை விட்டு விலகி கால்வாயில் விழுந்ததில் பதினொரு பேர் உயிரிழந்தனர்.
ஓவல் மைதானத்தில் இது சகஜம் தான்; முதல் இன்னிங்ஸில் பின்தங்கி இரண்டாவது இன்னிங்ஸில் வென்ற அணிகளின் வரலாறு
ஓவலில் நடைபெற்று வரும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி இன்னிங்ஸ் தொடங்கிய நிலையில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக 50+ அடித்த வீரர்; கவாஸ்கர், கோலியை விஞ்சி ரவீந்திர ஜடேஜா சாதனை
இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அதிக முறை 50+ ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.
எஸ்எம்எல் இசுசுவை கைப்பற்றுவதற்கான பங்கு வர்த்தக செயல்முறையை முடித்தது மஹிந்திரா
மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனம் எஸ்எம்எல் இசுசு லிமிடெட் நிறுவனத்தில் கட்டுப்பாட்டுப் பங்கை வாங்கும் செயல்முறையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
ஆசிய கோப்பை 2025 அட்டவணை வெளியானது; செப்டம்பர் 14இல் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்
ஆசிய கோப்பை 2025க்கான அட்டவணை மற்றும் இடங்களை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் நண்பர்கள் தினம் கொண்டாப்படுவது ஏன்? வரலாறும் பின்னணியும்
ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடும் அதன் வருடாந்திர பாரம்பரியத்தைப் பின்பற்றி, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுகிறது.
02 Aug 2025
பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடலநலக் குறைவால் காலமானார்
பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) மாலை 5 மணிக்கு சென்னையில் காலமானார்.
கூலி படத்தில் மோனிகா பாடல் வைத்தது எதற்கு? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
ரஜினிகாந்தின் வரவிருக்கும் படமான கூலியில் இடம் பெறும் மோனிகா பாடல் ஆன்லைனில் வைரலாகி வருகிறது, குறிப்பாக நடிகர் சௌபின் ஷாஹிரின் துடிப்பான நடனம் கவனத்தை ஈர்த்துள்ளது.
2025 இல் இந்தியாவில் 45,000 பேரை பணியமர்த்த கேப்ஜெமினி நிறுவனம் முடிவு
கேப்ஜெமினி இந்தியா 2025ஆம் ஆண்டில் 40,000 முதல் 45,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
INDvsENG 5வது டெஸ்ட்: 6வது சதம் விளாசினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்; புதிய வரலாறு படைத்தது இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓவல் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது ஆறாவது டெஸ்ட் சதத்தை அடித்து, இந்தியா பல சாதனைகளை முறியடிக்க உதவினார்.
அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயார்: ரஷ்யாவிற்கு டிரம்ப் பகீர் எச்சரிக்கை
அமெரிக்கா ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்குத் தயாராக உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இத்தனை பேர் Overthinking பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்களா? ஆய்வில் வெளியான பகீர் தகவல்
இந்தியாவில் அதிகரித்து வரும் Overthinking, அதாவது நடக்காத ஒன்றை நினைத்து வருத்தப்படும் பழக்கம் மற்றும் அதற்கான தீர்வாக தொழில்நுட்ப கருவிகளை மக்கள் பயன்படுத்துவது குறித்து ஒரு புதிய ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது.
தேவா கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி பட டிரெய்லர் வெளியானது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
INDvsENG 5வது டெஸ்ட்: 14 ஆண்டுகளில் முதல்முறை; நைட் வாட்ச்மேனாக களமிறங்கி அரைசதம் விளாசினார் ஆகாஷ் தீப்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளில் ஓவல் மைதானத்தில் நைட் வாட்ச்மேனாக களமிறங்கி சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினார்.
முட்டையை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நல்லது? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
முட்டை புரதச்சத்து மிக்க உணவு என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், அவற்றை சமைக்கும் முறை, அதன் ஆரோக்கிய நன்மைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கால்பந்து ரசிகர்களுக்கு குட் நியூஸ்; டிசம்பரில் இந்தியா வருகிறார் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் பல இந்திய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
15 மணி நேரத்தில் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) வெறும் 15 மணி நேரத்தில் வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.
இந்தியாவில் டெஸ்லாவின் முதல் சூப்பர்சார்ஜர் நிலையம் மும்பையில் ஆகஸ்ட் 4 அன்று திறப்பு
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக, தனது முதல் சூப்பர்சார்ஜர் நிலையத்தை மும்பையில் ஆகஸ்ட் 4, 2025 அன்று திறக்க உள்ளது.
வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் நீக்கம் என தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு; ஆதாரத்துடன் தேர்தல் ஆணையம் பதிலடி
ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) பீகாரின் புதிதாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் விடுபட்டதாகக் கூறி அரசியல் சர்ச்சையைத் தூண்டினார்.
கூலி வர்றான் சொல்லிக்கோ... இன்று மாலை 7 மணிக்கு கூலி டிரெய்லர் வெளியாகும் என அறிவிப்பு
ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூலி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் டிரெய்லரை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
வாரணாசியில் பிஎம் கிசான் சம்மன் நிதியின் 20வது தவணையை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) வாரணாசிக்குச் சென்று ₹2,200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
அமெரிக்க எதிர்ப்புக்கு மத்தியிலும் ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் இந்திய நிறுவனங்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அபராதங்கள் மற்றும் 25 சதவீத இறக்குமதி வரிகளை விதித்த போதிலும், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து பெறுகின்றன.
ஒரே நாளில் ₹1,120 உயர்வு; இன்றைய (ஆகஸ்ட் 2) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக் கிழமை (ஆகஸ்ட் 2) கடும் உயர்வைச் சந்தித்துள்ளது.
கடன் மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) அன்று ரூ.3,000 கோடி கடன் மோசடி மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனில் அம்பானிக்கு எதிராக லுக்அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் யூடியூப் சேனல் வைத்திருக்கத் தடை விதிப்பு; ஆஸ்திரேலியா அதிரடி அறிவிப்பு
குழந்தைகளை ஆன்லைனில் பாதுகாப்பதற்கான ஒரு துணிச்சலான நடவடிக்கையாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் கணக்குகளை வைத்திருப்பதை அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளது.
எண்ணெய் ஒப்பந்த அறிவிப்பின் தாக்கம்; பாகிஸ்தானில் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எச்சரிக்கை வெளியீடு
கடந்த ஜூலை மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுடன் ஒரு கூட்டு முயற்சியை அறிவித்தார்.
இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதாக வெளியான அறிக்கைக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தியதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், இந்த நடவடிக்கை நல்ல நடவடிக்கை என்று விவரித்தார்.