
INDvsENG 5வது டெஸ்ட்: 14 ஆண்டுகளில் முதல்முறை; நைட் வாட்ச்மேனாக களமிறங்கி அரைசதம் விளாசினார் ஆகாஷ் தீப்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளில் ஓவல் மைதானத்தில் நைட் வாட்ச்மேனாக களமிறங்கி சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினார். இதன் மூலம், 14 ஆண்டுகள் பழமையான அமித் மிஸ்ராவின் சாதனையை சமன் செய்தார். மேலும், இதன் மூலம் 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அரை சதம் அடித்த இரண்டாவது இந்திய நைட் வாட்ச்மேன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஆகாஷ் தீ இரண்டாவது நாளின் முடிவில் கடினமான காலகட்டத்தை அவர் வெற்றிகரமாகக் கடந்து, மூன்றாவது நாளிலும் நம்பிக்கையுடன் ரன்களைச் சேர்த்து 71 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
சாதனை
முந்தைய சாதனை
இதற்கு முன்னர் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இந்த சாதனையை அமித் மிஷ்ரா செய்தார். இந்நிலையில், ஆகாஷ் தீப்பின் இந்த செயல்திறன் இந்திய டிரஸ்ஸிங் ரூமில் இருந்து பெரும் பாராட்டுகளைப் பெற்றது. அவரது ஆட்டம் இந்தியா தங்கள் முன்னிலையை அதிகரிக்க உதவியது. அவர் ஆட்டமிழக்கும் முன் அணிக்கு பெரும் பங்களிப்பை அளித்தார். இதற்கிடையே, போட்டியைப் பொறுத்தவரை, இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணி 176 ரன்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதத்தை நெருங்கி ஆடி வருகிறார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களுடன் களத்தில் உள்ளது.