LOADING...
இன்னும் ஐந்து ஆண்டுகள் ஐபிஎல்லில் விளையாடுவதாக சொன்ன எம்எஸ் தோனி? முழு விபரம்
இன்னும் ஐந்து ஆண்டுகள் ஐபிஎல்லில் விளையாடுவதாக எம்எஸ் தோனி பேச்சு

இன்னும் ஐந்து ஆண்டுகள் ஐபிஎல்லில் விளையாடுவதாக சொன்ன எம்எஸ் தோனி? முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 03, 2025
04:42 pm

செய்தி முன்னோட்டம்

எம்எஸ் தோனி மீண்டும் ஒருமுறை ரசிகர்களை தனது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எதிர்காலம் குறித்து ஊகிக்க வைத்துள்ளார், இது அவரது ஓய்வுத் திட்டங்கள் குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது. 2020இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியதிலிருந்து, ஒவ்வொரு சீசனிலும் முக்கிய பேசுபொருளாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் தோனியின் ஐபிஎல் கடைசி சீசன் குறித்த கேள்விக்கு, அவர் நகைச்சுவையுடன் பதிலளித்தார். சமீபத்திய நிகழ்வில் பேசிய தோனி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட தனது கண் பார்வைத் திறன் நன்றாக ஐபிஎல் உள்ளதாகக் கூறினார். எனினும், இது கண்பார்வைக்கு மட்டுமே பொருந்தும் என்றும், உடலின் மற்ற பகுதிகளுக்கு அல்ல என்றும் புன்னகையுடன் கூறினார்.

ஐபிஎல் 

ஐபிஎல்லில் தோனியின் எதிர்காலம் 

"அடுத்த ஐந்து வருடங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியும் என்பதற்கான ஒரு டிக் மார்க் எனக்கு கிடைத்துள்ளது. ஆனால், பார்வைக்கு மட்டுமே எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் கேட்ச். என் உடலுக்கும் எனக்கு அனுமதி தேவை. என் கண்களால் மட்டும் கிரிக்கெட் விளையாட முடியாது," என்று அவர் நக்கலாகக் கூறினார். இந்த கருத்து, தோனியின் இரண்டு சாத்தியமான சூழ்நிலைகளுக்கும் கதவைத் திறந்து வைத்திருக்கும் வழி என்று பரவலாக விளக்கப்படுகிறது. அதாவது அவர் எதிர்பாராத நேரத்தில் திடீர் ஓய்வை அறிவிக்கலாம் அல்லது ஐபிஎல்லில் இன்னும் சில சீசன்கள் விளையாடலாம்.