
ஒரே நாளில் ₹1,120 உயர்வு; இன்றைய (ஆகஸ்ட் 2) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக் கிழமை (ஆகஸ்ட் 2) கடும் உயர்வைச் சந்தித்துள்ளது. சனிக் கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹140 உயர்ந்து ₹9,290 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1,120 உயர்ந்து ₹74,320 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹153 அதிகரித்து ₹10,135 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1,224 அதிகரித்து, ₹81,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராமுக்கு ₹125 அதிகரித்து ₹7,680 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹1,000 சரிந்து ₹61,440 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது. வெள்ளி விலை சனிக் கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ₹123 ஆகவும், ஒரு கிலோ ₹1,23,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.