LOADING...
தேவா கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி பட டிரெய்லர் வெளியானது

தேவா கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி பட டிரெய்லர் வெளியானது

எழுதியவர் Sekar Chinnappan
Aug 02, 2025
07:02 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, சனிக்கிழமை காலை படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் வெளியிட்ட சமூக ஊடக பதிவுகளில் படத்தின் டிரெய்லர் மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் பிரமாண்டமான ஆடியோ வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக, படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம், இந்திய சுதந்திர தினத்திற்கு சற்று முன்னதாக, ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் 

கூலி படக்குழு 

இந்தப் படத்தில் ரஜினிகாந்த், முன்னாள் தங்கக் கடத்தல்காரரான தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அவர் தனது பழைய கும்பலை விண்டேஜ் தங்கக் கைக்கடிகாரங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் ஒன்று சேர்ப்பதன் மூலம் தனது இழந்த சக்தியை மீட்டெடுக்க முயற்சிப்பது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாகார்ஜுனா அக்கினேனி, பூஜா ஹெக்டே, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சத்யராஜ் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post