
ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் நண்பர்கள் தினம் கொண்டாப்படுவது ஏன்? வரலாறும் பின்னணியும்
செய்தி முன்னோட்டம்
ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடும் அதன் வருடாந்திர பாரம்பரியத்தைப் பின்பற்றி, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுகிறது. இந்த நாள் நாடு முழுவதும் உள்ள நண்பர்களுக்கிடையேயான சிறப்புப் பிணைப்பை மதிக்க நட்பை வலுப்படுத்தவும், பரிசுகளை பரிமாறிக்கொள்ளவும், இதயப்பூர்வமான செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவும் என நட்பைப் போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. நட்பு தினத்தின் தோற்றம், 1935 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸின் தீர்மானத்தில் இருந்து தொடங்குகிறது, அமைதி மற்றும் நட்புறவை மேம்படுத்துவதற்காக ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமையை தேசிய நட்பு தினமாக அமெரிக்கா நியமித்தது. பின்னர், ஹால்மார்க் அட்டைகளின் நிறுவனர் ஜாய்ஸ் ஹால், வாழ்த்து அட்டைகளுடன் இந்த கருத்தை வணிகமயமாக்கினார், இது பிரபலமடைய உதவியது.
ஐநா சபை
ஐநா சபை தீர்மானம்
பின்னர் ஐநா சபை ஜூலை 30 அன்று சர்வதேச நட்பு தினத்தை தீர்மானம் மூலம் அதிகாரப்பூர்வமாக நிறுவிய போதிலும், கலாச்சார வசதி மற்றும் வார இறுதி கொண்டாட்டத்திற்காக இந்தியா தனது சொந்த தேதியை ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமையாக தக்க வைத்துக் கொண்டது. சர்வதேச நட்பு தினம் உலகளாவிய ஒற்றுமை மற்றும் அமைதியில் கவனம் செலுத்தும் அதே வேளையில், இந்தியாவின் பதிப்பு தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் சமூக கொண்டாட்டங்களை வலியுறுத்துகிறது. இந்தியாவைப் போலவே வங்கதேசம், நேபாளம், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பல நாடுகள் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினத்தைக் கொண்டாடுகின்றன. இருப்பினும், பராகுவே மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகள் ஜூலை 20 அன்று அதைக் கடைப்பிடிக்கின்றன.