
இந்தியாவில் டெஸ்லாவின் முதல் சூப்பர்சார்ஜர் நிலையம் மும்பையில் ஆகஸ்ட் 4 அன்று திறப்பு
செய்தி முன்னோட்டம்
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக, தனது முதல் சூப்பர்சார்ஜர் நிலையத்தை மும்பையில் ஆகஸ்ட் 4, 2025 அன்று திறக்க உள்ளது. ஒன் பிகேசி வளாகத்தில் அமையவுள்ள இந்த சார்ஜிங் நிலையம், டெஸ்லாவின் இந்தியச் சந்தைக்கான முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அண்மையில் மும்பையில் முதல் ஷோரூமைத் திறந்த டெஸ்லா, டெல்லியில் இரண்டாவது ஷோரூம் திறப்பதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய சூப்பர்சார்ஜர் நிலையத்தில் நான்கு V4 சூப்பர்சார்ஜிங் ஸ்டால்கள் (DC சார்ஜர்கள்) மற்றும் நான்கு டெஸ்டினேஷன் சார்ஜிங் ஸ்டால்கள் (AC சார்ஜர்கள்) இடம்பெறும்.
கட்டணம்
சார்ஜ் செய்வதற்கான கட்டணம்
V4 சூப்பர்சார்ஜிங் ஸ்டால்கள் மணிக்கு அதிகபட்சமாக 250 kW சார்ஜிங்கை வேகத்தை வழங்கும், இதன் கட்டணம் ஒரு கிலோவாட்டுக்கு ரூ.24 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 11 kW சார்ஜிங் வேகத்துடன் கூடிய டெஸ்டினேஷன் சார்ஜிங் ஸ்டால்களுக்கு ஒரு கிலோவாட்டுக்கு ரூ.11 கட்டணம் வசூலிக்கப்படும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டெஸ்லா மாடல் ஒய் வாகனங்கள், இந்த சூப்பர்சார்ஜர்களைப் பயன்படுத்தி வெறும் 15 நிமிடங்களில் 267 கிமீ தூரம் பயணிக்கும் அளவிலான சார்ஜைப் பெற முடியும். இது சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கும் கேட்வே ஆஃப் இந்தியாவிற்கும் இடையில் ஐந்து முறை சென்று வருவதற்கான தூரத்திற்குச் சமம். டெஸ்லா வாகன உரிமையாளர்கள், டெஸ்லா செயலி மூலம் சார்ஜிங் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறலாம்.