
இந்தியாவில் இத்தனை பேர் Overthinking பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்களா? ஆய்வில் வெளியான பகீர் தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் அதிகரித்து வரும் Overthinking, அதாவது நடக்காத ஒன்றை நினைத்து வருத்தப்படும் பழக்கம் மற்றும் அதற்கான தீர்வாக தொழில்நுட்ப கருவிகளை மக்கள் பயன்படுத்துவது குறித்து ஒரு புதிய ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது. Center Fresh மற்றும் YouGov இணைந்து நடத்திய இந்த கணக்கெடுப்பு இந்த முடிவுகள் இந்தியாவில் அதிகரித்து வரும் மனநலப் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்பம் எவ்வாறு ஒரு தீர்வாக மாறி வருகிறது என்பதைக் காட்டுகிறது. இந்த ஆய்வில் 81% இந்தியர்கள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு Overthinking பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்றும், நான்கு பேரில் ஒருவர் இது ஒரு நிரந்தரப் பழக்கம் என்று ஒப்புக்கொள்கிறார்கள் என்றும் கண்டறிந்துள்ளது.
அறிக்கை
அறிக்கை விபரங்கள்
'இந்தியா ஓவர்திங்கிங் ரிப்போர்ட்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, மூன்றில் ஒரு இந்தியர், குறுஞ்செய்திகளைப் புரிந்துகொள்வது முதல் பரிசுப் பொருட்களை வாங்குவது வரையிலான முடிவுகளுக்கு, அதிகமாகச் சிந்திப்பதைத் தவிர்க்க கூகுள் அல்லது சாட்ஜிபிடி போன்ற தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஒரு உணவகத்தில் ஒரு உணவைத் தேர்ந்தெடுப்பது அரசியல் தலைவரைத் தேர்ந்தெடுப்பதை விட மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று 63% பதிலளித்தவர்கள் கருதுகிறார்கள் என்றும், அன்றாட முடிவுகளிலும் Overthinking ஒரு பகுதியாகிவிட்டது என்றும் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. இந்தக் கணக்கெடுப்பு மாணவர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் என அடுக்கு I, II, III நகரங்களில் உள்ளவர்களை உள்ளடக்கி, வாழ்க்கை முறை, டிஜிட்டல் பழக்கவழக்கங்கள், டேட்டிங், உறவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தது.