உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 'இரண்டாம் கட்ட' தடைகளுக்கு அமெரிக்கா திட்டமா?
ரஷ்யாவிற்கு எதிரான "இரண்டாம் கட்ட" தடைகளுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை சூசகமாக தெரிவித்தார்.
உக்ரைன் அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யா தாக்குதல்; பதிலடி கொடுத்த உக்ரைன்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள கேபினட் உட்பட அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், ஒரு வயது குழந்தை உட்பட குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர்.
எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அனுட்டின் சார்ன்விரகுல் தாய்லாந்தின் புதிய பிரதமராகப் பதவியேற்பு
தாய்லாந்தின் மூத்த அரசியல்வாதியான அனுட்டின் சார்ன்விரகுல், நாட்டின் புதிய பிரதமராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.
தேர்தல் தோல்வியால் கட்சி உடைவதைத் தவிர்க்க ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலக முடிவு
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஜூலை மாத நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சிக்கு ஏற்பட்ட வரலாற்றுத் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலக முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராக டிராகன், யானையுடன் கரடியை இணைத்த ரஷ்ய அதிபர் புடின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசுகையில், இந்தியா-சீனா உறவை விளக்குவதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்திய டிராகன் மற்றும் யானை என்ற உருவகத்தை மேலும் விரிவாக்கி, அதில் ரஷ்யாவின் கரடியையும் இணைத்தார்.
சர்வதேச போதைப் பொருள் வழக்கில் இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்பு உலகிற்கே முன்னுதாரணம்; எஃப்ஏடிஎஃப் பாராட்டு
சர்வதேச அளவில் பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதி திரட்டலுக்கு எதிராகச் செயல்படும் அமைப்பான எஃப்ஏடிஎஃப் (FATF), இந்தியாவின் அமலாக்கத்துறை (ED) மற்றும் அமெரிக்க அமைப்புகள் இணைந்து நடத்திய கூட்டு விசாரணையை, சர்வதேச ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த உதாரணமாகப் பாராட்டியுள்ளது.
நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்படுவது உண்மைதான்; அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது கனடா
கனடாவில் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின் நீண்டகால கவலைகளை, கனடா அரசின் புதிய அறிக்கை உறுதி செய்துள்ளது.
அமெரிக்காவில் இனி பாதுகாப்புத் துறை கிடையாது? பெயரை போர்த்துறை என மாற்றி டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ராணுவ பலத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், அதிபர் டொனால்ட் டிரம்ப், பாதுகாப்புத் துறையின் பெயரை அதிகாரப்பூர்வமாக போர்த் துறை (Department of War) என மாற்றி நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
ஐநா பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பார் என அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான ஐநா சபையின் 80 வதுபொதுச் சபை கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடு வாங்கியதற்கு முத்திரை வரி செலுத்த தவறியது அம்பலமானதால் பிரிட்டன் துணைப் பிரதமர் ராஜினாமா
பிரிட்டனின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரேனர், தான் வாங்கிய வீடு தொடர்பான வரிச் சர்ச்சையில், அமைச்சர்களுக்கான நடத்தை விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்காவில் 'முத்தமிடும் பூச்சி' பரவலால் சாகஸ் நோய் அதிகரிப்பதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை
அமெரிக்காவின் 32 மாகாணங்களில் 'முத்தமிடும் பூச்சிகள்' (kissing bugs) என அழைக்கப்படும் டிரையாடோமைன் பூச்சிகளின் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த பூச்சிகள், சாகஸ் நோயைப் பரப்புகின்றன.
"இந்தியாவையும் ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டோம்": வருத்தத்துடன் ஒப்புக்கொண்டார் டிரம்ப்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு(SCO) உச்சி மாநாட்டில் மூன்று நாடுகளின் தலைவர்களும் ஒன்றாகக் காணப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்கா, இந்தியாவையும், ரஷ்யாவையும் "இருண்ட" சீனாவிடம் "இழந்து விட்டது" என்று அமெரிக்கா கூறியுள்ளது.
உக்ரைனுக்கு போருக்குப் பிந்தைய பாதுகாப்பு ஆதரவை தருவதாக 26 நாடுகள் உறுதி: மக்ரோன்
உக்ரைனுக்கு போருக்குப் பிந்தைய பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க 26 நாடுகள் தயாராக இருப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
சரும புற்றுநோய் புண்களை அகற்ற அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு அறுவை சிகிச்சை
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் சரும புற்றுநோய் புண்களை அகற்ற Mohs அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பதை அவரது செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் தொடர்ச்சியாக 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் வெள்ளிக்கிழமை தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
டிரம்ப்-மோடி நட்பு வரலாறு ஆகிவிட்டது: முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன்
டொனால்ட் டிரம்புக்கும், நரேந்திர மோடிக்கும் இடையே ஒரு காலத்தில் இருந்த நெருங்கிய தனிப்பட்ட பிணைப்பு மறைந்துவிட்டதாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு விழாவில் ஈவெரா உருவப்படத்தை திறந்துவைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின்
பிரிட்டனின் பிரபலமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஈவெரா உருவப்படத்தை திறந்து வைத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி, சமூக நியாயம் மற்றும் திராவிட இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
அரசின் உத்தரவை மதிக்காததால் நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களுக்குத் தடை
நேபாள அரசு, உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்துள்ளது.
இந்தியா மீது மேலும் தடைகள் விதிக்க வாய்ப்புள்ளதாம்; சொல்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
வர்த்தகப் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது அமெரிக்கா இரண்டாம் நிலைத் தடைகளை விதித்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
புடின், கிம்மை ஜி கலந்து கொண்ட சீனாவின் மாபெரும் ராணுவ அணிவகுப்பு; கடுப்பானது அமெரிக்கா
சீனா தனது மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை இன்று நடத்தியது.
"ஒருதலைப்பட்சமானது": 50% வரி சர்ச்சைக்கு மத்தியில் அமெரிக்க-இந்தியா உறவுகள் குறித்து டிரம்ப்
இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் மீதான தனது தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தீவிரப்படுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ தாண்டியது
ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் வடக்கு ஆப்கானிஸ்தானை தாக்கிய 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஐ எட்டியுள்ளது, அதே நேரத்தில் 3,100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தியர்களுக்கான விசா விதிகளை கடுமையாகும் நியூசிலாந்து: என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?
டிசம்பர் 1, 2025 முதல், நியூசிலாந்து வெளியுறவு அமைச்சகத்தின் பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தால் வழங்கப்பட்ட இந்திய விசா விண்ணப்பதாரர்களிடமிருந்து, போலீஸ் அனுமதிச் சான்றிதழ்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.
'கச்சத்தீவை எக்காரணத்திற்கும் இந்தியாவிடம் ஒப்படைக்கமாட்டோம்': இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க திட்டவட்டம்
கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
SCO உச்சி மாநாட்டில் இந்தியா செயல்பாட்டால் கடுப்பான அமெரிக்கா
உக்ரைனில் மாஸ்கோவின் போருக்கு நிதியளித்ததாகக் கூறி, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவை "மோசமான நடிகர்கள்" என்று முத்திரை குத்தி, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வாய்மொழித் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டார்.
பாகிஸ்தானுடனான குடும்ப வணிகத்திற்காக இந்தியாவை வெட்டிவிட்டார் டிரம்ப்: முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
பாகிஸ்தானில் தனது குடும்பத்தின் வணிக நலன்களுக்காக அமெரிக்க-இந்திய உறவுகளை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆபத்தில் ஆழ்த்துவதாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் (NSA) வழக்கறிஞருமான ஜேக் சல்லிவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா அனைத்து வரிகளையும் நீக்க முன்வந்ததாம்; புதிய சர்ச்சையைக் கிளப்பிய டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா அனைத்து வரிகளையும் நீக்க முன்வந்ததாக தெரிவித்து புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
உலக சிறந்த பீருக்கான விருதுகள் 2025: பல்வேறு பிரிவுகளில் விருது வென்று இந்திய பீர்கள் சாதனை
இந்திய மதுபான நிறுவனங்களின் தயாரிப்புகள், உலக பீருக்கான விருதுகள் 2025இல் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவரின் விமானத்தில் ரஷ்ய GPS Jammer பொருத்தி சதியா?
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனை ஏற்றிச் சென்ற விமானம் பல்கேரியா மீது பார்க்கையில் ஜிபிஎஸ் சிக்னல்களால் ஜாம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 800 க்கும் மேல் அதிகரிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்
கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு 11.47 அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
'குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்': பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு SCO தலைவர்கள் கண்டனம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதாக "சில நாடுகளை" அழைத்த சிறிது நேரத்திலேயே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) தலைவர்கள் அதன் தியான்ஜின் பிரகடனத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாகக் கண்டித்தனர்.
அமெரிக்கா எல்லாம் இல்லை.. இந்தியாவும் சீனாவும் தான் காரணம்: போர் நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யா அதிபர் புடின்
திங்களன்று தியான்ஜினில் நடைபெற்ற 25வது SCO தலைவர்கள் கவுன்சில் உச்சி மாநாட்டில், ரஷ்யா-உக்ரைன் போரை தீர்க்க இந்தியாவும் சீனாவும் மேற்கொண்ட முயற்சிகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டினார்.
SCO உச்சி மாநாடு: உறுப்பு நாடுகளுக்கு $281மில்லியன் மானியங்களை வழங்குவதாக சீனா உறுதி
இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளுக்கு 2 பில்லியன் யுவான் (தோராயமாக $281 மில்லியன்) மானியம் வழங்குவதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 500 க்கும் மேல் அதிகரிப்பு
ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, திங்கட்கிழமை (செப்டம்பர் 1) அதிகாலை 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையம் (NCS) இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
SCO மாநாடு:பக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் இருக்கையில், பிரதமர் மோடி தைரியமாக செய்த செயல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, SCO தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றுகையில், பயங்கரவாதம், பிராந்திய அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்பதை வலியுறுத்தினார்.
இந்தியா- சீனா- ரஷ்யா: SCO மாநாட்டில் கைகோர்த்த மூன்று பெரிய சக்திகள்; வைரலாகும் புகைப்படங்கள்
சீனாவின் தியான்ஜினில் தற்போது நடைபெற்று வரும் SCO கவுன்சில் உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் இணைந்து பேசிக்கொண்ட தருணம் தற்போது வைரலாகி வருகிறது.
"பிராமணர்கள் தான் லாபம் ஈட்டுகிறார்கள்": இந்தியா-ரஷ்யா எண்ணெய் உறவுகள் குறித்து டிரம்ப் உதவியாளரின் மற்றொரு வினோதமான கருத்து
ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மற்றும் பிரதமர் மோடி மீது வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோவின் தனிப்பட்ட தாக்குதல்கள் ஞாயிற்றுக்கிழமை புதிய உச்சத்தை எட்டியது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்த பிரதமர் மோடி; யார் இந்த சாய் கி?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) முக்கிய தலைவரும், அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மிகவும் நெருக்கமானவருமான சாய் கியை சந்தித்துப் பேசினார்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டிற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசினார்.
இந்தியா மீதான தடைகளை பின்பற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் என தகவல்
ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை ஐரோப்பிய நாடுகளும் பின்பற்ற வேண்டும் என வெள்ளை மாளிகை அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.