LOADING...
"இந்தியாவையும் ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டோம்": வருத்தத்துடன் ஒப்புக்கொண்டார் டிரம்ப்
SCO உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பல உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் அடங்குவர்

"இந்தியாவையும் ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டோம்": வருத்தத்துடன் ஒப்புக்கொண்டார் டிரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 05, 2025
04:21 pm

செய்தி முன்னோட்டம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு(SCO) உச்சி மாநாட்டில் மூன்று நாடுகளின் தலைவர்களும் ஒன்றாகக் காணப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்கா, இந்தியாவையும், ரஷ்யாவையும் "இருண்ட" சீனாவிடம் "இழந்து விட்டது" என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதன் மூலம், வாஷிங்டனுக்கும், இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் சிக்கலாகியுள்ளது என்ற பெரிய குறிப்பை டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். சீனாவின் ஜி ஜின்பிங் நடத்திய SCO உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பல உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் அடங்குவர். மூன்று தலைவர்களுக்கும் இடையிலான நட்புறவு ஒரு செய்தியை அனுப்பியது. அமெரிக்க அதிபர் நடத்திய கட்டணப் போருக்கு மத்தியில் இது ஒரு திருப்புமுனை என்றும், புதிய உலக ஒழுங்கை முன்னறிவிப்பதாகவும் பலர் கூறினர்.

பதிவு

மூன்று தலைவர்களின் புகைப்படங்களுடன் டிரம்ப் வெளியிட்ட பதிவு

"நாம் இந்தியாவையும் ரஷ்யாவையும் ஆழமான, இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம் என்று தெரிகிறது. அவர்கள் ஒன்றாக நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தைப் பெறட்டும்! ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப்," என்று டிரம்ப் தனது Truth social பதிவில் தலைப்பிட்டு, தியான்ஜின் சந்திப்பில் புடின் மற்றும் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி காணப்படும் படத்தைப் பகிர்ந்துள்ளார். கடந்த மாதம் இந்தியா மீது டிரம்ப் விதித்த 50 சதவீத வரிகளைத் தொடர்ந்து, இந்தியா-அமெரிக்க இருதரப்பு உறவுகள் பல ஆண்டுகளில் மிகக் குறைந்த நிலையைக் கண்டன.