LOADING...
ஆக்ஸ்போர்டு விழாவில் ஈவெரா உருவப்படத்தை திறந்துவைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின்
ஈவெரா உருவப்படத்தை திறந்துவைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின்

ஆக்ஸ்போர்டு விழாவில் ஈவெரா உருவப்படத்தை திறந்துவைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 05, 2025
08:56 am

செய்தி முன்னோட்டம்

பிரிட்டனின் பிரபலமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஈவெரா உருவப்படத்தை திறந்து வைத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி, சமூக நியாயம் மற்றும் திராவிட இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். பல்வேறு துறைகளில் உலகத் தரத்தில் முன்னேறிய தமிழகத்தை பற்றி உரைத்த முதல்வர் ஸ்டாலின், "வளமான தமிழகமாக நமது மாநிலம் வளர்ந்து வருகிறது. மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்க கூடிய மாநிலமாக உயர்ந்துள்ளோம். இதுவே திராவிட இயக்கத்தின் சாதனை,"என வலியுறுத்தினார்.

பெருமிதம்

"பெரியாரின் பேரனாக.." முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

"பல நூற்றாண்டுகளாக உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்போர்டு பல்கலை அரங்கத்தில் பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன்". "இங்க நான் தமிழக முதல்வர், தெற்காசியாவில் அரசியலை புரட்டி போட்ட இயக்கமான திமுக இயக்கதின் தலைவர் என்ற தகுதியுடன் மட்டுமல்ல, ஈவெராவின் பேரன் என்கிற கம்பீரத்துடன் உங்கள் முன் வந்து இருக்கிறேன்"என்றும் தெரிவித்தார். ஈ.வெ. ராமசாமியின் உருவப்படத்தை உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்துவைத்ததை "தனது வாழ்நாள் பெருமையாக" கருதுவதாக அவர் கூறினார்.

தமிழக வளர்ச்சி

தமிழக வளர்ச்சி குறித்து முதல்வர் கூறியதாவது

முதல்வர் ஸ்டாலின் மேலும் கூறியதாவது,"தமிழகம் கல்வி, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, வாழ்க்கை தரம், உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. பட்டினி சாவுகள் இல்லாத மாநிலமாக உருவெடுத்துள்ளது. உலகத்தில் சாதனை விளைவிக்கும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது." "ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள் இங்கு உயர்ந்த நிலையில் வாழ்கின்றனர். இது சமூக நீதியின் வெற்றி," என்று அவர் குறிப்பிட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post